குடும்ப வாழ்க்கையில் எனக்கு விருப்பமே கிடையாது - அக்ஷய் கண்ணா

மும்பை: திருமணம் ஒருவரின் வாழ்வில் எந்த ஒரு சிறப்பான அம்சத்தையும் கொடுக்கப் போவதில்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. எந்த ஒரு குறிப்பிட்ட விஷயமும் என்னை தடுக்கப்போவதில்லை. சிறு வயதில் இருந்தது போல் தான் இப்பவும் நான் இருக்கிறேன். திருமணம், குழந்தை இவை அனைத்துமே ஒருவரின் வாழ்க்கையை அதிகம் பாதிக்கிறது. அங்கு குழந்தை முக்கியத்துவம் பெற்று வாழ்க்கையே மாறுகிறது. என் வாழ்வில் நான் விரும்பும் விஷயங்களை கைவிட தயாராக இல்லை. எதிர்காலத்திலும் இதுவே தொடரும் என்று அதிரடியாக பதிலளித்துள்ளார் அக்ஷய் கண்ணா.

பாலிவுட் ஹீரோக்களில் ஒருவரான அக்ஷய் கண்ணாவை நாம் மற்ற பாலிவுட் ஹீரோக்களை போல அவ்வளவு எளிதாக படங்களில் பார்க்க முடியாது. ஆண்டிற்கு இரண்டு அல்லது மூன்று படங்களில் நடிக்கும் மற்ற நடிகர்கள் போல் இல்லாமல் இடைவெளி விட்டு தான் நாம் அவரை வெள்ளித்திரையில் பார்க்க முடியும்.

I am not interest in Family Life - Akshaye Khanna

44 வயதாகும் அக்ஷய் கண்ணா 2012ஆம் ஆண்டில் டெல்லி சஃபாரி மாற்றும் கலி கலி சோர் ஹை ஆகிய இரண்டு படங்களில் நடித்த பிறகு 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு டிஷூம் திரைப்படத்தில் நடித்தார். தற்போது அவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் செக்ஷன் 375 படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, அவர் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இடைவெளி விட்டு படங்களில் நடிப்பதால் இதை மறுபிரவேசம் என்றே மக்கள் எடுத்து கொள்கிறார்கள். இது குறித்து உங்கள் கருத்து என்ன, முன்னர் நீங்கள் உங்களுக்கு தனிமை தேவைப்படுகிறது என்று தெரிவித்தீர்கள்.

ஒரு பிரபலமான நபராக இருப்பது எவ்வளவு கடினமாக உள்ளது என்ற கேள்விக்கு, அக்ஷய் கண்ணா ஒவ்வொரு மனிதனும் தனக்கான தனிப்பட்ட நேரத்தை விரும்புகிறான். இது ஏன் பிரபலமான பொது நபராக இருக்கும் போது மட்டும் தவறாக தெரிகிறது என்றார்.

இது சினிமா துறையில் இருக்கும் நபராகவோ அல்லது வேறு ஏதாவது துறையில் இருக்கும் நபராகவோ இருக்கட்டும். அது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம். பிரபலம் இல்லாத ஒருவர் கூட சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துபவராக இருக்கலாம்.

அவர்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிக அளவாகவும் இருக்கலாம். இன்னும் சிலர் தங்களது வாழ்க்கையில் நிகழும் அனைத்து சம்பவங்களையும் இணையதளத்தில் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் சிலருக்கு அந்த செயல்கள் விருப்பம் இல்லாமலும் இருக்கலாம். இவை அனைத்தும் அவர் அவர்களின் தனிப்பட்ட விஷயங்கள்.

நீங்கள் திருமணம் என்னும் பந்தத்தில் ஈடுபடாததற்கு காரணம் என்ன என்று கேட்ட போது, திருமணம் ஒருவரின் வாழ்வில் எந்த ஒரு சிறப்பான அம்சத்தையும் கொடுக்கப் போவதில்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. எந்த ஒரு குறிப்பிட்ட விஷயமும் என்னை தடுக்கப்போவதில்லை. சிறு வயதில் இருந்தது போல் தான் இப்பவும் நான் இருக்கிறேன்.

எப்போது நம் வாழ்க்கையை நாம் வேறு ஒருவரோடு பங்கு போட்டு கொள்கிறோமோ, அப்போது நமக்கு என்று எந்த ஒரு கட்டுப்பாட்டையும் வைத்துக்கொள்ள முடியாது. சில விஷயங்களில் நாம் விட்டுக்கொடுக்க வேண்டும். அதில் எனக்கு எந்த ஒரு ஈடுபாடும் இல்லை என்றார்.

திருமணம் செய்துக்கொள்ள போவதில்லை என்றால் குழந்தையை தத்தெடுத்து கொள்வீர்களா என்ற கேள்விக்கு, திருமணம், குழந்தை இவை அனைத்துமே ஒருவரின் வாழ்க்கையை அதிகம் பாதிக்கிறது. அங்கு குழந்தை முக்கியத்துவம் பெற்று வாழ்க்கையே மாறுகிறது. என் வாழ்வில் நான் விரும்பும் விஷயங்களை கைவிட தயாராக இல்லை. எதிர்காலத்திலும் இதுவே தொடரும் என்று அதிரடியாக பதிலளித்துள்ளார் அக்ஷய் கண்ணா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X