முக்கிய கதாப்பாத்திரங்களில் தான் நடிப்பேன் என்றில்லை.. வயசும் ஒரு மேட்டர் இல்லை.. நடிகை அசால்ட்!

Recommended Video

Actress Ramya Challenge:Nayanthara, Trisha போல் Ramya challenge

சென்னை: முக்கியமான கதாப்பாத்திரங்களில் தான் நடிப்பேன் என்றில்லை என டிவி தொகுப்பாளினியும் நடிகையுமான ரம்யா தெரிவித்துள்ளார்.

டிவி தொகுப்பாளினியான நடிகை ரம்யா மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ரம்யாவின் நடிப்பு பேசப்பட்ட நிலையில் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன.

கேம் ஓவர், அமலா பாலுடன் ஆடை ஆகிய படங்களில் நடித்தார் ரம்யா. ஆடை படத்திலும் ரம்யாவின் நடிப்புக்கு வரவேற்பு கிடைத்தது. ஆடை படத்தில் ரம்யாவுக்கு அமலா பால் லிப் டூ லிப் முத்தம் கொடுத்த காட்சி பெரிதும் பேசப்பட்டது.

மக்கள் வரவேற்பு

மக்கள் வரவேற்பு

இந்நிலையில் தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் நடிகை ரம்யா, தற்போதுதான் நடிப்பு கேரியரை தொடங்கியிருப்பதாக கூறியுள்ளார். மக்கள் தங்களின் அன்பின் மூலம் தனக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆடை படம்

ஆடை படம்

மேலும் கேம் ஓவர் மற்றும் ஆடை படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் நடிகை ரம்யா. தான் தொகுப்பாளராக பிஸியாக இருந்த போது தனக்கு பட வாய்ப்புகள் வந்தன என்றும் அப்போது தனக்கு சினிமா மீது பெரிதாக ஆர்வம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தட்டி எழுப்பினார்

தட்டி எழுப்பினார்

சில படங்களில் நட்புக்காக நடித்திருக்கிறேன். அதெல்லாம் நானே விரும்பி நடித்தேன். தற்போது முழு மூச்சாக படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறேன். மணிரத்னம் சார்தான் என்னுள் கிடந்த நடிகையை தட்டி எழுப்பினார். ஓ காதல் கண்மணி வரை நான் நடித்ததே இல்லை.

பொழுதுபோக்கு அம்சங்கள்

பொழுதுபோக்கு அம்சங்கள்

நான் பெண்களை மையமாகக் கொண்ட படங்களில் நடித்துள்ளபோதும் இதுபோன்ற திரைப்படங்களில் நடிக்க நான் விரும்பவில்லை. வெகுஜன பொழுதுபோக்கு அம்சங்களில் ஒரு பகுதியாகவே இருக்க விரும்புகிறேன். என்னால் பல மாதிரியான படங்களில் நடிக்க முடியும்.

வயசு ஒரு மேட்டரே இல்லை

வயசு ஒரு மேட்டரே இல்லை

ஒரு பாதையில் மட்டும் செல்ல விரும்பவில்லை. அதேபோல் ஒன்றும் இல்லாத ரோல்களை செய்யவும் விரும்பவில்லை. இன்றைய கால கட்டத்தில் சினிமாவில் வயது மற்றும் திருமணம் ஒரு தடையில்லை. சமந்தா திருமணத்திற்கு பிறகு நடித்த படம் தான் 100 கோடி வசூலை பெற்றுள்ளது.

அர்த்தமுள்ள கதாபாத்திரங்கள்

அர்த்தமுள்ள கதாபாத்திரங்கள்

இன்னமும் நயன்தாராவும் திரிஷாவும் அருமையான படங்களை கொடுத்து வருகின்றனர். கதையை பொறுத்துதான் எல்லாமும். முன்னணி கதாபாத்திரங்கள் அல்லது இந்த கதாபாத்திரங்களில் தான் நடிப்பேன் என்றில்லை. அர்த்தமுள்ள கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன் இவ்வாறு நடிகை ரம்யா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X