ஒரு ரூபாய் கூட கடன் வாங்கியது இல்ல.. விளம்பரம் தேட வேண்டிய அவசியம் எனக்கில்ல: டென்ஷனான சுசி!

அஜித்தை வைத்து விளம்பரம் தேட வேண்டிய அவசியம் தனக்கில்லை என இயக்குநர் சுசீந்திரன் விளக்கமளித்துள்ளார்.

சென்னை: அஜித்தை வைத்து விளம்பரம் தேட வேண்டிய அவசியம் தனக்கில்லை என இயக்குநர் சுசீந்திரன் விளக்கமளித்துள்ளார்.

சசிக்குமாரின் மைத்துனரும் தயாரிப்பாளருமான அசோக்குமார் பைனான்சியர் அன்புச்செழியன் கொடுத்த கடன் தொல்லையால் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கந்துவட்டியை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இயக்குநர் அமீர், சுசீந்திரன், எஸ் பி.ஜனநாதன் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர். சினிமாத்துறையில் வேர் ஊன்றியுள்ள கந்துவட்டி ஆதிக்கத்தை தயாரிப்பாளர் சங்கம் தடுக்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சுசீந்திரன் பகீர் தகவல்

சுசீந்திரன் பகீர் தகவல்

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் சுசீந்திரன், நடிகர் அஜித் நான் கடவுள் படம் வந்த பீரியடில் கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டார் என கூறினார். மேலும் இயக்குநர் லிங்குசாமி உள்ளிட்டோரும் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அன்புக்கு எதிராக கொந்தளிப்பு

அன்புக்கு எதிராக கொந்தளிப்பு

இதையடுத்து அன்புச்செழியனுக்கு எதிராக அஜித் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொந்தளித்தனர். அன்புச்செழியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

ஏன் விளம்பரம் தேடுகிறீர்கள்?

இந்நிலையில் வெயில் என்ற பெயரில் ரசிகர் ஒருவர் சுசீந்திரனை டிவிட்டரில் வாரியுள்ளார். அதாவது, அப்போது எல்லாம் பேசாம இப்போது ஏன் பேசுகிறீர்கள்? அன்பிடம் கடன் வாங்கி உள்ளீர்களா? அஜித்தை வைத்து ஏன் விளம்பரம் தேடுகிறீர்கள் என கேட்டுள்ளார்.

டென்ஷனான சுசீந்திரன்

இதனால் டென்ஷனான சுசீந்திரன், அன்புச்செழியன் மட்டுமில்லை எவர்கிட்டயும் ஒரு ரூபாய் கூட கடன் வாங்கியது இல்லை. அஜீத்தை வைத்து விளம்பரம் தேட வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அன்புச்செழியன் பற்றி எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதே என் நோக்கம் என்றும் சுசீந்திரன் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X