நான் கர்ப்பமாக இல்லை.. தயவு செஞ்சு பொய்யான செய்திகளை பரப்பாதீங்க.. பாடகி சின்மயி விளாசல்!

சென்னை: பாடகி சின்மயி தான் கர்ப்பமாக இருப்பதாக பரவிய வதந்திகளுக்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Recommended Video

Chinmayi strong statement about her pregnancy | Rahul Ravindran, Madisar

யூடியூப் சேனல்களில் பாடகி சின்மயி கர்ப்பமாக இருப்பதாக பரவி வரும் தகவல்களுக்கு எதிராக விளக்கம் அளித்துள்ளார் சின்மயி.

மேலும், பொய்யான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் விளாசி உள்ளார்.

சின்மயி கணவர்

சின்மயி கணவர்

மாஸ்கோவின் காவிரி படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் ராகுல் ரவிந்திரனை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் பிரபல பின்னணி பாடகி சின்மயி. ஆனால், சமூக வலைதளத்தில் எந்தவொரு தனிப்பட்ட குடும்ப புகைப்படங்களையும் அவர் ஷேர் செய்ததில்லை.

சின்மயி கர்ப்பம்

சின்மயி கர்ப்பம்

பாடகி சின்மயி தொடர்ந்து சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்தாலும், குடும்பம் தொடர்பான எந்தவொரு விஷயத்தையும் பொதுவெளியில் வெளியிட்டதில்லை. இந்நிலையில், சின்மயி கர்ப்பமாக உள்ளதாக சில யூடியூப் சேனல்களில் தகவல்கள் வைரலாக பரவி வருகின்றன.

கர்ப்பமாக இல்லை

கர்ப்பமாக இல்லை

தன்னைப் பற்றி இப்படியொரு வதந்தி சமூக வலைதளங்களில் உலாவி வருவதை அறிந்த பாடகி சின்மயி, தான் கர்ப்பமாக இல்லை என்றும், பொய்யான செய்திகளை தயவு செய்து யாரும் பரப்ப வேண்டாம் என்றும் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் மூக்கை நுழைக்க வேண்டாம் எனவும் விளாசி உள்ளார்.

குழந்தை பிறந்தாலும்

குழந்தை பிறந்தாலும்

இப்படி யூடியூப் வியூஸ்க்காக பொய்யான தகவல்களை பரப்பாதீர்கள் என்றும் கண்டித்துள்ளார் பாடகி சின்மயி. மேலும், அப்படியே குழந்தை பிறந்தாலும் அதன் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் ஒரு போதும் பகிர மாட்டேன் என்றும், தனது திருமண புகைப்படங்களை கூட தான் எப்போதும் வெளியிடவில்லை என்றும் கூறியுள்ளார்.

சோஷியல் மீடியா பக்கமே

சோஷியல் மீடியா பக்கமே

எங்கள் குழந்தைகளையும் கண்டிப்பாக சமூக வலைதளங்கள் பக்கமே அனுமதிக்க மாட்டோம் என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார். சமூக வலைதளத்தில் பிரபலங்களுக்கு கொடுக்கப்படும் சீண்டல்கள் காரணமாகவே இப்படியொரு முடிவுக்கு வந்துள்ளார் பாடகி சின்மயி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X