விருதுகளுக்காக படம் இயக்குவதில்லை: தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன்

சென்னை: 2019ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம் அசுரன்.

இந்த படத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டீஜே அருணாச்சலம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார், கலைப்புலி S. தாணு தயாரித்திருந்தார்.

குவிந்த விருதுகள்

குவிந்த விருதுகள்

67வது தேசிய திரைப்பட விருதுகள் - சிறந்த இயக்குனருக்கான விருதை இயக்குனர் வெற்றிமாறன் அசுரன் திரைப்படத்திற்காக வென்றுள்ளார். சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை அசுரன் திரைப்படம் வென்றுள்ளது.

அசுரன் தனுஷ்

அசுரன் தனுஷ்

67வது தேசிய திரைப்பட விருதுகள் - அசுரன் படத்தில் நடித்த தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.
சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் என அசுரன் திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை அள்ளி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விருதுகளுக்காக அல்ல

விருதுகளுக்காக அல்ல

தேசிய விருது கிடைத்தது குறித்து வெற்றிமாறன் கூறியதாவது, தேசிய விருது கிடைத்தது பெரிய ஊக்கமாக உள்ளது, என்னை போன்ற இயக்குனர்களுக்கு விருதுகள் எப்போதுமே ஊக்கத்தை கொடுக்கும் எனவும் விருதுகளுக்காக படம் இயக்குவதில்லை எனவும் கூறியுள்ளார்.

பாலு மகேந்திரா

பாலு மகேந்திரா

மேற்கொண்டு பேசிய வெற்றிமாறன், தனக்கு எந்த விருது வழங்கினாலும் அதை பாலு மகேந்திராவிற்கு சமர்பிப்பேன், இந்த விருதையும் அவருக்கே சமர்ப்பிக்கிறேன் என கூறியுள்ளார். அசுரன் சமூக நீதிக்கான கதை எனவும், அது மக்களிடையே போய்ச் சேர வேண்டும் என்பதே முதல் எண்ணமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அசுரன் படத்தில் தன்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X