பதவிக்காக நான் ஆசைப்படவில்லை.. நடிகர் சங்கம் தேர்தல் குறித்து நடிகர் விஷால் மதுரையில் பேட்டி

Recommended Video

நடிகர் சங்கம் தேர்தல் குறித்து நடிகர் விஷால்

மதுரை: தாம் பதவிக்காக ஆசைப்படவில்லை என நடிகர் சங்க தேர்தல் குறித்து நடிகர் விஷால் கூறியுள்ளார்

மதுரையில் உள்ள தனியார் விடுதியில் மதுரை நாடக நடிகர் சங்க உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து, தங்களுக்கு நடிகர் சங்கத் தேர்தலில் ஆதரவு தர பாண்டவர் அணியின் சார்பாக விஷால் கோரினார்.இக்கூட்டத்தில் 127 மதுரையை சேர்ந்த நாடக நடிகர்களும், 40 சினிமா கலைஞர்களும் கலந்து கொண்டனர்,

I am not tempted for the position.. Actor Vishal tell about Actors Association Election


இக்கூட்டத்தில் நடிகர்கள் விஷால்,கருணாஸ் , ரமணா , விக்ணேஷ் , கோவை சரளா , சச்சு , லதா , ராஜேஸ் , அஜய்ரத்தினம் ஆகியோர் கலந்துகொள்ள கொண்டனர்

இந்தகூட்டத்தில் பங்கேற்று பேசிய நடிகர் விஷால் மதுரையில் கடந்த முறை தேர்தலை சந்திக்கும் போது மதுரையில் எங்களது அணிக்கு பாண்டவர் அணி என பெயர் வைக்கப்பட்டது.கடந்த 3 ஆண்டுகளில் சொன்னதையும் , சொல்லாததையும் செய்துள்ளோம்.இன்னும் 3 மாதங்களில் கட்டிடம் திறக்கப்பட உள்ளது.மதுரை நாடக நடிகர்களை சந்திக்கும் போது ஒரு உற்சாகம் ஏற்படுகின்றது.

மதுரை , தேனி , திண்டுக்கல் பகுதியிலிருந்து எங்களை நம்பி நாடக நடிகர்கள் வந்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள நாடக நடிகர்களை சந்திக்க உள்ளோம்.கடந்த தேர்தலில் நாங்கள் சொன்னதை செய்யாமல் இங்கு வந்திருந்தால் , இந்த சந்திப்பு நடந்து இருக்காது . சொன்னதை செய்ததால் தான் நாங்கள் நாடக நடிகர்களை சந்திக்க முடிகின்றது.

தேர்தல் நடைபெறும் இடத்தை நான் தேர்வு செய்ய போவது இல்லை , தேர்தல் நடத்தும் அதிகாரி தான் பார்ப்பார்.3100 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர் . நான் பதவிக்காக ஆசை படவில்லை என்றார் விஷால்

தொடர்ந்து பேசிய கருணாஸ் : இந்த தேர்தலில் எதிரணியினர் முழுக்க திட்டமிட்டு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை செய்கின்றனர். நடிகர் சங்கத்திற்கு ஐசரி கணேஷை தாண்டி ஏராளமானோர் நிதியுதவி அளித்துள்ளனர். நடிகர் சங்க சொத்தை ஐசரி கணேஷ் அபகரிக்க முயற்சிக்கிறார் வட்டிக்கு தான் ஐசரி கணேஷ் பணம் கொடுத்தார்

சங்கரதாஸ் சுவாமிகள் பெயரில் உருவாக்க வேண்டிய கட்டிடத்திற்கு தனது அப்பா பெயரை வைக்க வேண்டும் என ஐசரி கணேஷ் விரும்புகிறார் என கூறினார். நடிகை சச்சு பேகையில் தனிப்பட்டவர்களின் பெயரை வைக்க அனுமதிக்கமுடியாது , நடிகர் சங்கம் அனைவருக்கும் பொதுவானது தேர்தலை நடத்தகூடாது என எதிரணியினர் விரும்புகின்றனர் என குற்றம்சாட்டினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X