இனி தர்ஷன் வாழ்க்கையில் நான் இல்லை.. என்னால் அவருக்கு கெட்டப்பெயர் வரக்கூடாது.. காதலி கண்ணீர்!

Recommended Video

Bigg Boss 3 Tamil: இனிமே உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன்: தர்ஷனின் காதலி உருக்கம்

சென்னை: தர்ஷன் வாழ்க்கையில் இனி நான் இல்லை, என்னால் அவருக்கு கெட்டப்பெயர் வரக்கூடாது என அவரின் காதலியான சனம் ஷெட்டி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள தர்ஷன் மீது ஷெரினுக்கு ஃபீலிங்ஸ் இருந்தது. இதனை அபிராமி மற்றும் வனிதாவிடம் அவர் கூறியிருந்தார். அதேபோல் தர்ஷனிடமும் இதுகுறித்து அவர் பேசியது நேற்றைய எபிசோடில் தெரியவந்தது.

ஆனால் நேற்று முன்தினம் எபிசோடில் வனிதா, அஃபேர் என்று கூறிய ஒரு வார்த்தையால், கோபமடைந்த ஷெரின் எங்களுக்குள் எதுவுமே இல்லை என்று கூறினார். மேலும் தர்ஷனுக்காக வெளியில் காத்திருக்கும் ஒரு ஜீவனை நான் காயப்படுத்த விரும்பவில்லை என்றும் கூறினார்.

தர்ஷனுக்கு சப்போர்ட்

தர்ஷனுக்கு சப்போர்ட்

இந்நிலையில் தர்ஷனின் காதலியும் மாடலுமான சனம் ஷெட்டி, ஊடகங்களுக்கு கண்ணீருடன் பேட்டியளித்துள்ளார். அதில் தான் எப்போதும் தர்ஷனுக்கு சப்போர்ட்டாகதான் இருக்கிறேன்.

உயிரையே வைத்துள்ளேன்

உயிரையே வைத்துள்ளேன்

என்னால் தர்ஷனின் இமேஜ் கெடக்கூடாது. தர்ஷன் பிக்பாஸ் டைட்டிலை வின் பண்ண நான் தடையாக இருப்பது போல் தெரிந்தால் அவரை விட்டு விலகி விடுகிறேன். நான் தர்ஷன் மேல் உயிரையே வைத்துள்ளேன்.

மனவேதனை

மனவேதனை

ஆனால் என்னால் அவருக்கு எந்த கெட்ட பெயரும் இருக்கக்கூடாது. நான் கொடுக்கும் பேட்டிகளால் தர்ஷனுக்கும் ஷெரினுக்கும் மனவேதனை ஏற்படுகிறது. இது எனக்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது.

என் வாழ்க்கையில் இல்லை

என் வாழ்க்கையில் இல்லை

தர்ஷன், ஷெரின் இருவரும் என்னால் மனவேதனை அடைய வேண்டாம். இனிமேல் நான் தர்ஷன் குறித்து பேச மாட்டேன். இந்த நிமிஷத்தில் இருந்து நான் தர்ஷன் வாழ்க்கையில் இல்லை. இருந்தாலும் என் மனதில் எப்போதும் தர்ஷன் இருப்பார் என கண்ணீருடன் தெரிவித்துள்ளார் சனம் ஷெட்டி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X