twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ’நான் அங்கு இல்லவே இல்லை.. ப்ளீஸ் என்னைக் காயப்படுத்தாதீர்கள்’.. தாக்குதல் குறித்து ஜூலி வேதனை!

    போலீஸ் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுவது குறித்து ஜூலி விளக்கமளித்துள்ளார்.

    |

    Recommended Video

    Bigg Boss Julie: தான் அங்கு இல்லவே இல்லை.. மறுப்பு தெரிவித்த ஜூலி- வீடியோ

    சென்னை: காவலரை தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தின்போது தான் அங்கு இல்லவே இல்லை என பிக் பாஸ் ஜூலி மறுப்பு தெரிவித்துள்ளார்.

    ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீரத்தமிழச்சியாக அடையாளம் காணப்பட்ட ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே மேலும் பிரபலமானார். தற்போது சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளினியாகவும், சில தமிழ் படங்களில் நாயகியாகவும் அவர் நடித்து வருகிறார்.

    இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஜூலி தனது நண்பருடன் காரில் சென்ற போது, அந்தக் கார் சென்னை வேப்பேரி காவல் நிலைய தனிப்படை காவலர் பூபதியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக தகவல்கள் வெளியானது.

    இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தம்: காரணம் கமல் ஹாஸன் இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தம்: காரணம் கமல் ஹாஸன்

    போலீஸ் மீது தாக்குதல்:

    போலீஸ் மீது தாக்குதல்:

    இதுகுறித்து கேட்ட போது, சாதாரண உடையில் இருந்த காவலரை ஜூலியின் நண்பர் தாக்கியதாகவும், பூபதி போலீஸ் எனத் தெரிந்ததும் ஜூலியின் நண்பர் மேலும் 10 பேரை அழைத்து வந்து அவரைத் தாக்கிவிட்டு தப்பியதாகவும் கூறப்படுகிறது.

    விசாரணை:

    விசாரணை:

    இது தொடர்பாக காவலர் பூபதி அளித்துள்ள புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிகிறது. ஏற்கனவே ஜூலி சமூகவலைதளங்களில் மிகவும் பிரபலம் என்பதால் இந்தச் செய்தி காட்டூத்தீ போல் பரவியது. ஜூலியை நெட்டிசன்கள் சகட்டுமேனிக்கு திட்டத் தொடங்கினர்.

    தவறான தகவல்:

    தவறான தகவல்:

    இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற போது தான் அங்கு இல்லவே இல்லை என ஒன் இந்தியாவிற்கு விளக்கமளித்துள்ளார் ஜூலி. மேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில், "தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் இடத்தில் நான் இல்லவே இல்லை. எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் செய்யும் தவறுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும். தேவையில்லாமல் என்னையும் இப்பிரச்சினையில் சேர்த்து விட்டார்கள்.

    ஜூலி வேதனை:

    ஜூலி வேதனை:

    சமூகவலைதளப் பக்கங்களில் உண்மை தெரியாமல் என்னை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாடை பார்சல் அனுப்புகிறோம் என்றெல்லாம் பதிவு வெளியிட்டுள்ளனர். இதனால் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். ப்ளீஸ் உண்மை தெரியாமல் என்னை இப்படி காயப்படுத்தாதீர்கள்" என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

    English summary
    Actress Julie said that she was not present in the spot of police attack incident took place.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X