நான் இப்போ ஊழல் தடுப்பு ஆணையத்தின் மாநில இயக்குநர்.. மீரா மிதுன் அதிரடி! வைரலாகும் ஐடி கார்டு!
Recommended Video
சென்னை: நடிகை மீரா மிதுன் தான் இப்போது ஊழல் தடுப்பு ஆணையத்தில் மாநில இயக்குநர் எனக் கூறி அதற்கான அடையாள அட்டையை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகை மீரா மிதுன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சினிமாத்துறையை சேர்ந்தவர்களை ஒரு வழி செய்து வரும் மீரா மிதுன், அரசியல்வாதிகளையும் அரசையும் விடுவதில்லை
ஆரம்பம் முதலே சென்னை போலீசார் மீது அதிருப்தி குற்றச்சாட்டுக்களை கூறி வரும் மீரா மிதுன், தனக்கு அநீதி இழைத்த போலீசாரை கூண்டோடு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என பிரதமருக்கு டிவிட் செய்திருந்தார்.
போலீசார் மீது விளாசல்
அண்மையில் சென்னையில் பிரஸ் மீட் கொடுத்த மீரா மிதுன், சென்னை போலீசார் பத்தாயிரம் லஞ்சம் கொடுத்தால் யார் மீது வேண்டுமானாலும் வழக்கு போடுவார்கள் என்று கூறி பரபரப்பை கிளப்பினார். மேலும் தமிழகத்தில் லஞ்சம் தலை விரித்தாடுவதாகவும் தெரிவித்திருந்தார்.

மத்திய அரசு பணியாளர்
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள மீரா மிதுன், தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரணகளப்படுத்தி வருகிறார். வழக்கமாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிடும மீரா மிதுன், தற்போது தன்னை மத்திய அரசு பணியாளராக டிக்ளேர் செய்து போஸ்ட் ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.
அடையாள அட்டை
தன்னை மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநராக தெரிவித்திருக்கும் மீரா மிதுன், அதற்கான அறிவிப்பு ஆணையையும் அதுதொடர்பான அடையாள அட்டையையும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

ஓடவும் முடியாது
மேலும் இப்போது நான் ஊழல் தடுப்பு ஆணையத்தில் (ஏ.சி.சி) சென்னை தமிழ்நாடு மாநில இயக்குநராக உள்ளேன். இனிமேல் யாரும் மறைக்க முடியாது, நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது, ஊழல் இல்லாத அரசுக்கு என்னுடன் கைகோருங்கள் என்று கூறியுள்ளார்.

போலி அட்டை
மீரா மிதுனின் இந்த போஸ்ட் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பலர், இது போலியான அறிவிப்பு ஆணை என்றும் போலி அடையாள அட்டை என்றும் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











