இந்த படத்தில் வெறும் நடிகனாக மட்டும் இருக்கிறேன்... லோகேஷ் கனகராஜ் இடம் கமல் சொன்னது!
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி,மாஸ்டர் என தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்து உள்ளார்
Recommended Video
இப்பொழுது தனது கலையுலக குருவான கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார்
விக்ரம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தில் வெறும் நடிகராக மட்டும் இருக்கிறேன் என கமல் ஹாசன் கூறியதாக பிரபல தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்

இயக்குநராக தன்னை மாற்றிக்கொண்ட
தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய இயக்குநர் என்ற இடத்தை பெற்றுள்ளார் லோகேஷ் கனகராஜ். குறும்படங்களின் மூலம் இயக்குநராக தன்னை மாற்றிக்கொண்ட லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. முதல் படத்திலேயே ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தை இயக்கினார்.

கைதி பிளாக்பஸ்டர் வெற்றி
கமர்சியல் எதுவும் இல்லாமல் ஹீரோயின் இல்லாமல் குத்துப்பாட்டு இல்லாமல் ஒரு சூப்பரான வெற்றி படத்தை இயக்க முடியும் என கைதி மூலம் நிரூபித்து காட்டியவர் லோகேஷ் கனகராஜ். கார்த்தியின் மிரட்டலான நடிப்பு லோகேஷ் கனகராஜின் ராவான இயக்கம் என மிகச் சிறப்பாக உருவான கைதி திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. கைதி தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இப்போது இந்தியில் அஜய் தேவ்கான் நடிப்பில் உருவாகி வருகிறது

முழுக்க முழுக்க கல்லூரி கதை களத்தில்
தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசம் காட்டி நடித்து வரும் விஜய் முதல்முறையாக ப்ரொபசர் கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் மாஸ்டர். முழுக்க முழுக்க கல்லூரி கதை களத்தில் வெளியான இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி பவானி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பட்டைய கிளப்பி இருப்பார். விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்த மாஸ்டர் திரைப்படம் கொரோனா சூழலிலும் வெளியாகி பிரமாண்ட வெற்றி கண்டது

வெறும் நடிகனாக மட்டும் இருக்கிறேன்
இவ்வாறு தொடர் வெற்றிகளை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தனது குருவான கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன் கதை களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் ரிலீஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் பிரபல தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தில் நான் வெறும் நடிகனாக மட்டும் இருக்கிறேன் என்று கமல்ஹாசன் கூறினார். எனவே விக்ரம் திரைப்படம் 100% என்னுடைய ஸ்டைலில் தான் இருக்கும் என பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











