இனிமேல் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாத்தான் நடிப்பேன் - ஐஸ்வர்யா ராஜேஷ்

சென்னை: நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் என்னை நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிக்க வைத்துவிட்டனர். இனிமேல் நான் அவருக்கு ஜோடியாகத்தான் நடிப்பேன் என்று திட்டமிட்டுள்ளேன் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை திரைப்படம் மூலம் பிரபலம் ஆனார். இதற்கு முன்பு அவர் சட்டப்படி குற்றம், புத்தகம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவருக்கு காக்கா முட்டை திரைப்படம் மூலம் தான் நல்லதொரு தொடக்கம் கிடைத்தது என்று சொல்லலாம். இந்த திரைப்படத்திற்கு பிறகு சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார்.

I am planning on pairing with Sivakarthikeyan-Aishwarya Rajesh

பின்பு தர்மதுரை திரைப்படம் மூலம் அவரது மார்க்கெட் உயர்ந்தது. அதன் பின்பு வந்த அனைத்து திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி அடைந்தன. அவர் இந்தியில் டாடி மற்றும் மலையாளத்தில் நடிகர் நிவின் பாலியுடன் சகாவு மற்றும் நடிகர் துல்கர் சல்மானுடன் ஜோமோன்ட் சுவிசேஷங்கள் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் தயாரித்த கனா திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் மிக பெரிய வெற்றி அடைந்ததை அடுத்து இந்த திரைப்படத்தை தெலுங்கு மொழியில் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் அவரை வைத்தே மீண்டும் எடுக்கப்பட்டது. இந்த திரைப்படமும் மிக பெரிய வெற்றி அடைந்து. அதன் பின்பு மீண்டும் சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தில் தங்கையாக நடித்துள்ளார்.

ஹீரோயினாக நடித்து வரும் போது ஹீரோவின் தங்கையாக நடிப்பது பற்றி கருத்து கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ், மிகச் சிறிய வயதிலேயே என்னை இரு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க வைத்தனர். ரொம்பவும் பதட்டத்தோடு தான் நடித்தேன். இருந்தாலும், திரைப்படம் வெற்றி என்றதும், அதுவே என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தி விட்டது. அது மூலம் எனக்கு நல்ல வாய்ப்பு தேடி வந்தது.

அதேபோல, இப்போது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு என்னை தங்கையாக நடிக்க வைத்து விட்டனர். அதனால் பெரிய வருத்தம் எதுவும் இல்லை என்றாலும், இனிமேல் அவரோடு ஜோடியாக நடித்துதான், அக்கா-தங்கை நடிகை என்னும் இமேஜை மாற்ற வேண்டும். இனி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகத்தான் நடிப்பது என முடிவெடுத்திருக்கிறேன் என்கிறார்.

நடிகர் திலகம் சிவாஜி நடிகையர் திலகம் சாவித்ரி நடித்த திரைப்படம் தான் பாசமலர். அண்ணன் தங்கை பாசத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. இந்த திரைப்படத்திற்கு பிறகு தான் சிவாஜியும் சாவித்ரியும் பல திரைப்படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். அதனால் இவரும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி சேர்ந்து நடிக்க வாய்ப்பு வரும். அதை பற்றி கவலை படவேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்.

சினிமாவில் பல விதமான உறவு முறையில் பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இது ஒரு பெரிய விஷயமே கிடையாது என்று ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பலர் எடுத்து சொல்லி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X