twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிக்கிறேன் ஆனால்..ரஜினி போட்ட கண்டிஷன்..நெகிழ்ந்துப்போன இயக்குநர்

    |

    ரஜினியை ஒரு படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க அழைத்தபோது அவர் உடனடியாக ஒப்புக்கொண்டு ஒரு கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளார்.

    அந்த கண்டிஷனை கேட்ட தான் ஆடிப்போனதாக இயக்குநர் செந்தில் நாதன் பதிவிட்டுள்ளார்.

    ரஜினிகாந்தின் எளிமை, கேட்டதும் ஒப்புக்கொண்டது பற்றி பிரமித்துபோய் பதிவி செய்துள்ளார் இயக்குநர் செந்தில்நாதன்.

    தேவா இசை நிகழ்ச்சி மேடையில் வருத்தப்பட்ட ரஜினி... போட்டிப் போட்டு செல்ஃபி எடுத்த மீனா, மாளவிகா!தேவா இசை நிகழ்ச்சி மேடையில் வருத்தப்பட்ட ரஜினி... போட்டிப் போட்டு செல்ஃபி எடுத்த மீனா, மாளவிகா!

     40 ஆண்டுகளாக உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி

    40 ஆண்டுகளாக உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி

    நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் 40 ஆண்டுகளாக உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். 80 களின் ஆரம்பத்தில் நடிக்க வந்த அவர் படிப்படியாக 80 களின் மத்தியில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நட்சத்திரமாக மாறினார். இரண்டாம் இடத்தில் கமல் மற்றும் இடையில் மோகன், ராமராஜன் போன்றோர் முன்னணிக்கு வந்தாலும் எந்த காலத்திலும் முன்னணி நட்சத்திரம் ரஜினிகாந்த் ஒருவராகத்தான் இருந்துள்ளார்.

     அஜித், விஜய் இளம் நாயகரகளாலும் வீழ்த்த முடியாத ரஜினி

    அஜித், விஜய் இளம் நாயகரகளாலும் வீழ்த்த முடியாத ரஜினி

    1990 களின் இறுதியில் திரைக்கு வந்த விஜய், அதன் பின்னர் வந்த அஜித், பின்னர் வந்த சூர்யா, 2000 ஆண்டுகளில் வந்த தனுஷ், சிம்பு, கார்த்தி, சிவகார்த்திகேயன் போன்றோர் முன்னணி நடிகர்களாக தனி ரசிகர் பட்டாளங்களை கொண்டு இயங்கினாலும் என்று உச்ச நட்சத்திரமாக ரஜினிகாந்த் மட்டுமே இருக்கிறார். இன்றும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ரஜினிகாந்த் மட்டுமே இருக்கிறார். அப்படிப்பட்ட ரஜினிகாந்த் திரையில் தோன்றினாலே அந்தப்படம் வெற்றிகரமாக ஓடும். ரஜினிகாந்த் சில படங்களில் மட்டுமே கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

     ரஜினி நடித்த சில கௌரவ தோற்றங்கள்

    ரஜினி நடித்த சில கௌரவ தோற்றங்கள்

    அதில் முக்கியமான படம் வள்ளி அவரது சொந்த தயாரிப்பில் வந்த படம். சில காட்சிகளில் வந்தாலும் கலக்கு கலக்கு என கலக்கி இருப்பார். அதேபோல் 1990 -ல் வெளிவந்த "பெரிய இடத்து பிள்ளை" படத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்தார், அந்தப்படத்தில் நடிக்க வைக்க ரஜினிகாந்தை அணுகியபோது ரஜினிகாந்த் தங்களை நடத்திய விதமும், பெரிய நடிகர் என்கிற பந்தா இல்லாமல் அவர் நடந்துகொண்ட விதமும் அதன் பின்னர் அவர் போட்ட கண்டிஷனை கேட்டு, "எந்த நடிகரும் செய்வேன்னு சொல்லுவாங்க ஆனா செய்ய மாட்டாங்க ஆனால் இவர் செய்தார், அதையும் தாண்டி என்னை பிரமிக்க வைத்து விட்டார்" என்கிறார் இயக்குநர் செந்தில்நாதன்.

     இயக்குநர் செந்தில் நாதனுக்கு வாக்களித்த ரஜினி

    இயக்குநர் செந்தில் நாதனுக்கு வாக்களித்த ரஜினி

    இயக்குநர் செந்தில்நாதன் விஜயகாந்தை வைத்து பூந்தோட்ட காவல்காரன் படத்தை இயக்கியவர். எஸ்.ஏ.சந்திரசேகரின் உதவியாளராக இருந்தவர். அவருக்கு ரஜினிகாந்த் பழக்கம். இந்த நேரத்தில் அவருக்கு ஏதாவது ஒரு உதவி செய்வதாக ரஜினி வாக்களித்திருந்தார். 90 களில் பெரிய இடத்து பிள்ளை என்கிற படத்தை இயக்கினார். அப்போது அந்தப்படத்தில் ரஜினியை கௌரவ வேடத்தில் நடிக்க வைக்க ரஜினியை அணுகினார். அப்படி என்ன நடந்தது. அதை செந்தில்நாதன் வாயாலேயே கேட்போம். " நான் எடுத்த பெரிய இடத்து பிள்ளை படத்தில் ரஜினிகாந்தை நடிகராக அவரிடம் கவுண்டமணியும், செந்திலும் கதை சொல்லும் காட்சி.

     எப்போ பண்லாம்..எப்போ பண்லாம் கேள்வி கேட்ட ரஜினி

    எப்போ பண்லாம்..எப்போ பண்லாம் கேள்வி கேட்ட ரஜினி

    அந்த காட்சியில் ரஜினிகாந்த் நடிக்க கேட்கலாமே என தயாரிப்பாளர் பிரபாகரன் ஆசைப்பட ரஜினிகாந்திடம் கேட்க போனோம். அப்போது குருசிஷ்யன் பட ஷூட்டிங்கில் இருந்தார் ரஜினி. என்னை அவர் பார்த்துவிட்டார். உடனடியாக லைட் ஆஃப் பண்ணுங்க என என்னிடம் ஓடி வந்தார். நான் இப்படி ஒரு படம் எடுக்கிறேன் அதில் நீங்கள் கதை கேட்பது போன்ற காட்சி என்று சொன்னோம். பண்லாம்.. பண்லாம்.. எப்போ பண்லாம்? என்று கேட்டார், சார் நீங்க பிசியாக இருக்கீங்க எப்பன்னு நீங்க முடிவு செய்து சொன்னால் அப்ப வச்சிக்கலாம் என்றோம். நாளைக்கே பண்லாம், நாளைக்கே அப்படின்னு சொன்னார்.

     சொன்னபடி செய்து கொடுத்த ரஜினி

    சொன்னபடி செய்து கொடுத்த ரஜினி

    எங்களுக்கு ஆச்சர்யம் ஓக்கே சார்னு சொன்னோம். நாளை காலை 7 மணிக்கு வீட்டுக்கு வருகிறோம் என்றோம் ஓக்கே ஆனா ஒரு கண்டிஷன் எனக்கு எதுவும் பண்ண வேண்டாம், ஓக்கே என்கிறார். போஸ்டர் விளம்பரம் எதுவும் வேண்டாம் என்கிறார். பின்னர் காலையில் அவர் வீட்டுக்கு போனால் ரெடியா இருந்தார். காட்சியில் நடித்து கொடுத்தார். ஷூட்டிங் முடிந்தவுடன் அப்புறம் நான் வேறென்ன பண்ணனும் என்கிறார், சார் இதுவே போதும் என்று சொன்னவுடன் ஓக்கே எப்ப டப்பிங்குன்னு சொல்லுங்க நான் உடனே வந்து முடிச்சு கொடுத்துவிடுகிறேன் என்கிறார். அதே போல் சரியாக வந்து முடித்தும் கொடுத்தார். அவர்தான் ரஜினிகாந்த். நான் பிரமித்து போய்விட்டேன்" என செந்தில்நாதன் சொன்னார்.

    English summary
    When Rajini was guest role to play the titular role in a film, he immediately agreed with one condition.Director Senthil Nathan posted that he was shocked after hearing that condition. Director Senthilnathan has posted in awe of Rajinikanth's simplicity and his acceptance when asked.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X