ரஜினி இவ்ளோ உன்னிப்பாக பார்க்கிறார் என்பதில் எனக்கு பெருமை: கமல் ஹாஸன்

By Siva

சென்னை: தன் படங்களை ரஜினி உன்னிப்பாக பார்ப்பதில் தனக்கு பெருமை என்று கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட வையாபுரி மேடையில் அமர்ந்து கமல் ஹாஸனுடன் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பிறகு உறவுகளின் அருமை புரிவதாக தெரிவித்தார்.

மேலும் தனக்கு 19 சொந்தங்கள் கிடைத்துள்ளதாக கூறினார்.

கமல் சார்

கமல் சார்

அம்மா, அப்பா அதற்கு பிறகு என் வாயில் அதிகமாக வந்த வார்த்தை கமல் சார். இதை என் மனைவி கூட கூறுவார்கள். நான் அதிகமாக பேசினது கமல் சார் என்றார் வையாபுரி.

படம்

படம்

வெளியில் எதாவது படம் ரிலீஸானால் படம் பூஜை என்றால் கமல் சார் படம் தானே நீங்க இருப்பீர்கள் அல்லவா என்பார்கள். என் குடும்பத்தாருடன் ரஜினி சார் வீட்டிற்கு சென்றிருந்தேன் என்று வையாபுரி கூறினார்.

ரஜினி

ரஜினி

ரஜினி வந்தவுடன் வையாபுரி எப்படி இருக்கீங்க என்று கேட்டுவிட்டு நாம் இதுவரைக்கும் ஒரு படம் கூட பண்ணவில்லையல்லவா. ஆமா கமல் கூட நிறைய படம் பண்ணியிருக்கிறீர்கள் அல்லவா என்று அவர் கேட்டார் என்றார் வையாபுரி.

பெருமை

பெருமை

வையாபுரி சொன்னதை கேட்ட கமல் கூறியதாவது, எனக்கு என்ன பெருமை என்றால் ரஜினி எவ்வளவு உன்னிப்பாக என் படங்களை பார்க்கிறார் என்பது எனக்கு பெருமை என்றார்.

ஆணை

ஆணை

நீங்கள் சிறு சிறு வேடங்கள் பண்ணி தான் பெரிய வேடங்கள் செய்தீர்கள். அதை எல்லாம் ரஜினி பார்க்கிறார் என்பது எனக்கு பெருமை. நான் இனிமேல் உங்களுக்கு ஒரு ஆணை பிறப்பிக்கிறேன். நான் இனிமேல் சார் இல்லை அண்ணன் என்றார் கமல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X