திரிஷ்யம் மாதிரியான கதையில் நடிக்கத் தயார்: 'அரசியல்வாதி' விந்தியா
அதிமுகவின் அரசியல் பேச்சாளராக உள்ள விந்தியா, திரிஷ்யம் போல கதை அமைந்தால் நடிக்கத் தயார் என்று கூறியுள்ளார்.
'சங்கமம்' படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் விந்தியா. தொடர்ந்து நிறைய தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
விந்தியா நடிப்பில் கடைசியாக 2005ஆம் ஆண்டு வெளியான 'கண்ணம்மா'. படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். பிறகு ஆயுதம் செய்வோம் படத்தில் ஒரு காட்சியில் கவுரவ தோற்றத்தில் தோன்றினார். அதன் பிறகு படங்களில் நடிக்கவில்லை.

அதிமுகவில் பேச்சாளர்
அ.தி.மு.க.வில் இணைந்து தேர்தல் பணியாற்றி வருகிறார். அக்கட்சியில் தலைமை கழக பேச்சாளராகவும் இருக்கிறார்.

பிறந்தநாள் கொண்டாட்டம்
இன்று விந்தியாவுக்கு பிறந்தநாள் ஆகும். வீட்டில் ‘கேக்' வெட்ட எளிமையாகப் பிறந்த நாளைக் கொண்டாடினார்.

திரிஷ்யம் படம் மாதிரி
மீண்டும் சினிமாவில் நடிப்பீர்களா என்று விந்தியாவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், ‘திரிஷ்யம்', ‘அழகி' மாதிரி கதைகள் அமைந்தால் நடிக்க தயாராக இருக்கிறேன் என்றார்.

கதாநாயகியாகவே நடிப்பேன்
தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். நாயகியாகவே நடித்துவிட்டதால் வேறு கேரக்டர்களை ஏற்க தயக்கமாக இருக்கிறது.

அழைப்பு வருகிறது
இப்போது நிறைய புதுகதாநாயகிகள் வந்து விட்டனர். எனக்கும் படங்களில் நடிக்க அழைப்பு வருகிறது. ஆனால் எனக்கு விருப்பம் இல்லை. மறுத்து விட்டேன் என்று கூறினார் விந்தியா.


Click it and Unblock the Notifications











