ரஜினியும் -கமலும் ரெடின்னு சொல்லட்டும், எனக்கு சம்பளமே வேணாம்... பாரதிராஜா!

By Sudha

சென்னை: ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் இணைந்து நடிக்க சரி என்று சொல்லட்டும். அவர்களை இயக்க நான் தயார், எனக்கு சம்பளம் கூட வேண்டாம் என்று கூறியுள்ளார் இயக்குநர் இமயம் என்று ரசிகர்களால் போற்றப்படும் பாரதிராஜா.

'ஸ்வீட் சிக்ஸ்டீன்'

'ஸ்வீட் சிக்ஸ்டீன்'

கமலையும், ரஜினியையும் வைத்து 16 வயதினிலே என்ற அருமையான படத்தைக் கொடுத்தவர் பாரதிராஜா. இன்று வரை இரு நடிகர்களுக்கும் இந்தப் படம் ஒரு முக்கியமான படமாக விளங்கி வருகிறது.

கமலுடன் தொடர் ஹிட் கொடுத்தவர்

கமலுடன் தொடர் ஹிட் கொடுத்தவர்

கமல்ஹாசனுடன் தொடர்ந்து இணைந்து நிறைய ஹிட் படங்களைக் கொடுத்தவர் பாரதிராஜா. சிகப்பு ரோஜாக்கள், ஒரு கைதியின் டைரி என இவர்கள் இணைந்த படங்கள் மெகா ஹிட் படங்களாகின.

இனி நம் வழி தனி வழிx

இனி நம் வழி தனி வழிx

ரஜினி, கமலைப் பொறுத்தவரை அவர்கள் இணைந்து நடித்த கடைசிப் படம் நினைத்தாலே இனிக்கும்தான். அதன் பிறகு மீண்டும் சேர்ந்து நடிக்க வேண்டாம், தனித் தனிப் பாதையில் போகலாம் என்று கமல்ஹாசன் சொல்ல, அதை ஏற்றார் ரஜினி. அதன்படி இன்று வரை தனியாகவே பயணம் செய்து வருகிறார்கள் இருவரும்.

பாலச்சந்தரின் முயற்சி

பாலச்சந்தரின் முயற்சி

இருவரையும் இணைந்து நடிக்க வைக்க சில வருடங்களுக்கு முன்பு இயக்குநர் பாலச்சந்தர் முயற்சித்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது நடக்கவில்லை.

பாரதிராஜாவுக்கு வெற்றி கிடைக்குமா?

பாரதிராஜாவுக்கு வெற்றி கிடைக்குமா?

இந்த நிலையில்தான் தற்போது பாரதிராஜா அந்த முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தெரிகிறது. இதை அவரே தனது வாயால் சொல்லியுள்ளார்.

சம்பளமே வேண்டாங்க

சம்பளமே வேண்டாங்க

ரஜினியும், கமல்ஹாசனும் இணைந்து நடிக்கத் தயார் என்று சொன்னால் அவர்களை இயக்க நான் தயாராக இருக்கிறேன். சம்பளம் கூட வாங்கிக் கொள்ளாமல் இயக்க நான் ரெடி என்று கூறியுள்ளார் பாரதிராஜா.

சம்மதிப்பார்களா ரஜினி, கமல்?

சம்மதிப்பார்களா ரஜினி, கமல்?

பாரதிராஜாவின் இந்த ஆபரை கமல்ஹாசனும், ரஜினிகாந்த்தும் ஏற்பார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி என்பது மட்டும் நிச்சயம்.

பார்க்கலாம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X