ரோஜா 2வில் நடிக்க ஆசை– மதுபாலா

By Mayura Akilan

ரோஜா படத்தின் இரண்டாம் பாகத்தை மணிரத்னம் இயக்கினால் மீண்டும் நடிக்க விரும்புகிறேன் என்று நடிகை மதுபாலா கூறியுள்ளார்.

இவர் ரோஜா படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். திருமணத்திற்குப் பின்னர் மும்பையில் செட்டில் ஆன மதுபாலா தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் மட்டும் நடிப்பேன் என்று கூறியிருந்த மதுபாலா, ரோஜா படத்தின் மூலம் மீண்டும் ஒரு ரவுண்ட் வரலாம் என்று நினைக்கிறார்.

ஹிட் படங்களில்

ஹிட் படங்களில்

அழகன் படத்தில் அறிமுகமான மதுபாலா, ரோஜா படத்தில் அரவிந்த் சுவாமி ஜோடியாக கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றார்.

ஜென்டில்மேன்

ஜென்டில்மேன்

ஜென்டில்மேன், மிஸ்டர் ரோமியோ, இருவர், போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சின்னத்திரையில்

சின்னத்திரையில்

கடந்த சில வருடங்களுக்கு முன்பு சின்னத்திரையில் நடித்த மதுபாலா நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்கிறார்.

ரோஜா 2

ரோஜா 2

ரோஜா படத்தின் இரண்டாம்பாகத்தை மணிரத்னம் இயக்கினால் நான் மீண்டும் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் மதுபாலா.

முதல்வன்

முதல்வன்

இப்போது ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்கள் தயாராகி வருகின்றன. சூர்யா நடித்த சிங்கம் படத்தின் இரண்டாம் பாகம் ‘சிங்கம்-2' என்ற பெயரில் ரிலீசாகி வெற்றி பெற்றது.

ஜெய்ஹிந்த் படத்தின் 2-ம் பாகத்தை அர்ஜுன் இயக்குகிறார். ‘முதல்வன்' படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகிறது. முனி படத்தின் இரண்டாம் பாகம் காஞ்சனா என்ற பெயரில் வந்தது. அதன் மூன்றாம் பாகத்தையும் லாரன்ஸ் இயக்கி வருகிறார்.

ரோஜா 2வும் வரலாம்

ரோஜா 2வும் வரலாம்

அதுபோல் மணிரத்தினம் இயக்கி வெற்றிகரமாக ஓடிய ரோஜா படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X