விஜய், அஜித்தை வைத்து 200 கோடியில் படம் எடுக்க நான் ரெடி.. தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷ் அதிரடி!

சென்னை : நடிகர் அஜீத் மற்றும் விஜய் திரைப்படங்கள் ஒவ்வொரு முறை வெளியாகும் போதும் போட்டி போட்டுக்கொண்டு வசூல் சாதனைகளை செய்து வருகிறது

சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படம் மற்றும் பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு நல்ல வெற்றியைப் பெற்றுத் தந்தது

இந்த நிலையில் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ் விஜய், அஜீத் கால்ஷீட் கொடுத்தால் 200 கோடி பட்ஜெட்டில் படமெடுக்க நான் தயாராக உள்ளேன் என தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசியுள்ளார்

 நெல்சன் இயக்கத்தில் விஜய்

நெல்சன் இயக்கத்தில் விஜய்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் மிக பிரம்மாண்ட வெற்றி பெற்றதை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வந்த திரைப்படம் பீஸ்ட் . சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தை படத்திற்கு இசை அமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.

 முழுக்க முழுக்க ஆக்சன் ரோலில்

முழுக்க முழுக்க ஆக்சன் ரோலில்

கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் என நெல்சன் இயக்கத்தில் வெளியான இரண்டு திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற நிலையில் பீஸ்ட் உருவாகி வந்தது. விஜய் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் முழுக்க முழுக்க ஆக்சன் ரோலில் நடித்து பட்டையை கிளப்பியிருப்பார் lபெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது

 ஹாலிவுட் தரத்தில் உருவானது

ஹாலிவுட் தரத்தில் உருவானது

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து இயக்குனர் வினோத் அஜித் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்த நேர்கொண்டபார்வை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் இணைந்த திரைப்படம் வலிமை. தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் ஹாலிவுட் தரத்தில் உருவாகி வந்த இந்த திரைப்படம் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு வெளியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்திய இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது இருப்பினும் ஹாலிவுட் ஸ்டைலில் இந்த படம் இருந்ததால் இப்படத்திற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

விஜய், கமல் சூட்டிங் ஸ்பாட்ல எப்படி நடந்துக்கொள்வார்? Lokesh Kanagaraj Pressmeet | Kamal | Vikram
 200 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்க

200 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்க

விஜய் மற்றும் அஜீத் என இருவரும் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக உள்ளனர் இருவரின் திரைப்படங்கள் ஒவ்வொரு முறை வெளியாகும் போதும் வசூலில் போட்டி போட்டு சாதனைகள் செய்து வருகின்றன இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் விஜய் மற்றும் அஜித்தை வைத்து 200 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்க நான் தயார் அவர்களின் கால்ஷீட் கிடைத்தால் உடனடியாக படப்பிடிப்பை தொடங்கி விடுவேன் என அதிரடியாக பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X