எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே.. சீமானின் தம்பி நான் - ரூட்டை மாற்றிய அசீம்?
சென்னை: பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் அசீம் சீமானின் தம்பி நான் என ட்விட்டரில் பதிவு செய்திருப்பதை அடுத்து தனது ரூட்டை மாற்றிவிட்டாரா அசீம் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிக்பாஸுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஒவ்வொரு சீசனையும் மக்கள் விரும்பி பார்த்தாலும் அண்மையில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6 பெரும் விவாத பொருளானது. வாரா வாரம் ஏதேனும் ஒரு சண்டை நடந்ததால் மக்கள் தவறாமல் இந்த சீசனை கண்டு ரசித்தனர்.

டைட்டில் வின்னரான அசீம்
20 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த சீசனில் விக்ரமன், அசீம், ஷிவின் ஆகிய மூன்று பேரும் இறுதி நாளுக்கு முன்னேறினர். இதில் விக்ரமன் வெற்றி பெறுவார் என பெரும்பாலானோர் எதிர்பார்க்க அசீம் டைட்டிலை தட்டி சென்றார். விக்ரமனும், ஷிவினும் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்தனர். ஆனால் அசீம் வெற்றி பெற்றதை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை; அறம் வீழ்ந்துவிட்டது என பலர் சமூக வலைதளங்களில் கூறி வந்தனர்.

தொடர் பேட்டிகளில் அசீம்
அசீம் டைட்டில் வின்னராகி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் பல பேட்டிகளை கொடுத்து வருகிறார். அந்தப் பேட்டிகளில் பிக்பாஸ் வீட்டுக்குள் தான் நடந்துகொண்ட விதம் பற்றியும், எதற்காக அப்படி நடந்துகொண்டேன் என்பது குறித்தும் விரிவாகவே பேசிவருகிறார். சில பேட்டிகளில் விக்ரமனையும் மறைமுகமாக சாடினார். இதனால் பிக்பாஸ் முடிந்த பிறகு அசீம் டாக் ஆஃப் தி டவுனாக இருக்கிறார்.

கமல் ஹாசனை சீண்டினாரா அசீம்?
அதுமட்டுமின்றி அவர் அளித்த பேட்டி ஒன்றில் பிக்பாஸை பார்த்துதான் என் மகன் வளர வேண்டுமென்ற எந்த அவசியமும் இல்லை என கூறினார். அவரது இந்தப் பேட்டியை பார்த்த சமூக வலைதளவாசிகள் கமல் ஹாசனைத்தான் மறைமுகமாக சாடினார் அசீம் என கூறினர். இதனால் பதறிப்போன அசீம், கமல் ஹாசன் எனது தந்தை போன்றவர் என்று விளக்கமளித்திருந்தார்.

சீமானின் தம்பியான அசீம்
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தனியார் ஊடகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட அசீம் சீமானுக்கு முத்தம் கொடுத்தார். அதனையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், "எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்குப் பிறப்பினும் அயலான் அயலானே" கொள்கை, கோட்பாடு, தத்துவத்தையெல்லாம் தாண்டிய உறவிது !! என்றும் அண்ணன் சீமானின் அன்பு தம்பிதான் நான்" என குறிப்பிட்டுள்ளார்.

ரூட்டை மாற்றிவிட்டாரா அசீம்?
இந்நிலையில் தொடக்கத்தில் தான் ஒரு திராவிட ஆதரவாளர் என கூறி அமைச்சர் உதயநிதி மற்றும் கிருத்திகா உள்ளிட்டோரின் பெயரை அடிக்கடி உபயோகப்படுத்தி வந்தார். ஆனால் இப்போது சீமானின் தம்பி என கூறியிருப்பதன் மூலம் அசீம் தனது ரூட்டை மாற்றிவிட்டாரோ என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர். அதுமட்டுமின்றி சீமானை நம்பி போனவர்கள் எல்லாம் பாதியிலேயே வெளியே வந்திருக்கிறார்கள் அதுபோல்தான் அசீமும் வருவார் எனவும் அவர்கள் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











