'களத்தில் சந்திப்போம்' நடிப்புக்கு வரும் பாராட்டும் வரவேற்பும்.நடிகை மஞ்சிமா மோகன் திடீர் மகிழ்ச்சி!
சென்னை: களத்தில் சந்திப்போம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, பாராட்டுகள் கிடைக்கிறது என்று நடிகை மஞ்சிமா மோகன் தெரிவித்துள்ளார்.
தமிழில், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய, அச்சம் என்பது மடமையடா படம் மூலம் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன்.
இதில் சிம்பு ஹீரோவாக நடித்திருந்தார். அதற்கு முன் மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ளார், மஞ்சிமா.

களத்தில் சந்திப்போம்
தொடர்ந்து இப்படை வெல்லும், தேவராட்டம் படங்களில் நடித்த மஞ்சிமா, இப்போது, என்.ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா, அருள்நிதி, பிரியா பவானி சங்கர், ராதாரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகின 'களத்தில் சந்திப்போம்' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் கடந்த 5 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

நம்பிக்கை பெருகியது
இதில் நடித்ததற்காக தனக்கு பாராட்டுகள் குவிந்து வருவதாக மஞ்சிமா மோகன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: களத்தில் சந்திப்போம் படத்தின் கதையை கூறியபோதே என் கேரக்டர் நன்றாக வரும் என்ற நம்பிக்கை இருந்தது. படப்பிடிப்பில் அந்த நம்பிக்கை பன்மடங்கு பெருகியது.

பாராட்டும், வரவேற்பும்
தற்போது படத்திற்கும், எனது நடிப்பிற்கும் ரசிகர்களிடமிருந்து கிடைத்து வரும் பாராட்டும், வரவேற்பும் மகிழ்ச்சியை தந்துள்ளது. இந்த நேரத்தில் என்னை இப்படத்திற்கு தேர்ந்தெடுத்ததற்காக தயாரிப்பாளர் சௌத்ரி, ஹீரோ ஜீவா, இயக்குநர் ராஜசேகர் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்னுடன் இந்தப் படத்தில் பங்குகொண்ட அனைவருக்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.

மலையாள ரீமேக்
நடிகை, மஞ்சிமா மோகன் தற்போது குயின் படத்தின் மலையாள ரீமேக்கான ஜாம் ஜாம், விஷ்ணு விஷால் நடிக்கும் எஃப் ஐ ஆர், விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் படங்களில் நடித்து வருகிறார். அவர் ஒப்பந்தமாகியுள்ள மேலும் சில படங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன.


Click it and Unblock the Notifications











