“நினைப்பு தான் பொழப்பை கெடுக்கும் சிலபேருக்கு”... தமிழிசை பற்றி காயத்ரி ரகுராம் டிவீட்!

பாஜகவில் தான் இன்னும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார் நடிகை காயத்ரி ரகுராம்.

Recommended Video

தமிழிசை பற்றி காயத்ரி ரகுராம் டிவீட்- வீடியோ

சென்னை: தான் இன்னும் பாஜகவிலேயே நீடிப்பதாக தெரிவித்துள்ளார் நடன இயக்குநரும், நடிகையுமான காயத்ரி ரகுராம்.

சார்லி சாப்ளின், விசில் உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்தவர் நடன இயக்குநர் காயத்ரி ரகுராம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் நடந்து கொண்ட விதத்தால் மக்களின் அதிருப்தியை அதிகளவில் சம்பாதித்தார்.

I am still in BJP, says Gayathri Raguram

அதன் தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குடித்து விட்டு கார் ஓட்டியதாக ஒரு சர்ச்சையில் சிக்கினார். ஆனால், அப்போது தான் 'இருமல் மருந்து குடித்து விட்டு வண்டி ஓட்டியதாகவும், அதில் இருந்த ஆல்கஹாலே வாகனச் சோதனையில் தெரிய வந்தது' என்றும் பின்னர் அவர் விளக்கமளித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை அளித்த பேட்டியால், அவருக்கும் காயத்ரி ரகுராமுக்கும் இடையே மோதல் உண்டானது.

இந்நிலையில், தான் இன்னமும் பாஜக கட்சியிலேயே தொடர்வதாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் காயத்ரி. அப்பதிவில் அவர், "நினைப்பு தான் பிழைப்பைக் கெடுக்கும் சிலருக்கு. தாங்களாகவே யூகித்துக் கொண்டு தவறான செய்திகளைப் பரப்புவார்கள். அதனால் தான் மற்றவர்களைப் பற்றி கருத்து தெரிவிப்பார்கள். நான் இன்னும் பாஜகவில் தான் இருக்கிறேன். இதைப் பற்றி யார் விவாதிக்க விரும்புகிறார்களோ, அவர்கள் அதைப் பண்ணட்டும். ஆனால், நான் தமிழிசை மேடத்தின் ஆதரவாளர் இல்லை. சிம்பிள்" என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X