Don't Miss!
- News
"மரண அடி".. இதான் கரெக்ட்டான டைம்.. இதுக்கும் தடையா?.. தாலிபன்களின் ஓவர் அட்டகாசம்.. எகிறிய ஐ.நா.
- Finance
பட்ஜெட் 2023: இதற்கு தான் முக்கியத்துவம் தரனும் - ப. சிதம்பரம்..!
- Lifestyle
இறந்த உடலை சாப்பிட்ட அரசர்கள் முதல் அரசவையில் சுயஇன்பம் செய்த அரசர் வரை தலைசுற்ற வைத்த மன்னர்கள்...!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Sports
"எங்களுக்கு நீங்க ஆர்டர் போடாதீங்க" பணிச்சுமை விவகாரம்.. பிசிசிஐ - ஐபிஎல் அணிகள் இடையே மோதல்- விவரம்
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அழுவதா.. சிரிப்பதா.. என்றே எனக்கு தெரியல.. உயிரில் கலந்த உறவு எஸ்.பி.பி. பிரசன்னா உருக்கமான ட்வீட்!
சென்னை: எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவு தனக்கு அழுகையும் சிரிப்பையும் கலந்து உறவை கொடுப்பது ஏன் என்றே தெரியவில்லை என நடிகர் பிரசன்னா உருக்கமான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
கொரோனா நோய் தாக்கி கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி. பாலசுப்ரமணியம், கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில், திரும்பி வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், அனைவரையும் ஏமாற்றிவிட்டு அவர் இயற்கை எய்திவிட்டார்.
அப்புறம் படத்தை யாரை வைத்து முடிப்பீர்கள்.. கேளடி கண்மணி பட இயக்குநரை பிரமிக்க வைத்த எஸ்பிபி!

கண்ணீர் அஞ்சலி
செங்குன்றம், தாமரைப்பாக்கத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. நேற்று முதலே ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் அவரது உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வந்த நிலையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பிரபலங்கள் இரங்கல்
ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாரதிராஜா, இளையராஜா, சூர்யா, மனோ, இயக்குநர் அமீர், திரிஷா, அமலா பால், வெங்கட் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜெயம் ரவி, மகேஷ் பாபு, சல்மான் கான், சிரஞ்சீவி என இந்திய திரையுலகத்தின் பல பிரபலங்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

உயிரில் கலந்த உறவு
எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைந்து விட்டார். அவரது மறைவு நேரத்தில் துக்கப்படுவதா? அல்லது அவரது பாடல்களை கேட்டு சந்தோஷம் அடைவதா? என எந்த மனநிலையில் நான் இப்போ இருக்கிறேன் என்றே தெரியவில்லை என நடிகர் பிரசன்னா மிகவும் உருக்கமாக ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார். உயிரில் கலந்த உறவு எஸ்.பி. பாலசுப்ரமணியம் என நெகிழ்ந்துள்ளார்.

நான் போகிறேன் மேலே மேலே
பிரசன்னாவின் நாணயம் படத்திற்காக எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய, "நான் போகிறேன் மேலே மேலே.. பூலோகமே காலின் கீழே" பாடலில் இடையில் ஒரு சிரிப்பு இருக்கும் அதெல்லாம் வேற யாரும் அனுபவிச்சு பாட முடியுமானு தெரியல. நேற்று ஜேம்ஸ் வசந்த் அந்த பாடல் பதிவு நிகழ்வு பற்றி சொன்னது இன்னும் நெகிழ்வு... என ரசிகர்கள் கமெண்ட் செய்து உருகி வருகின்றனர்.