மதுவுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்.. பிக்பாஸ் பிரபலத்தின் டிவிட்டால் ஹேப்பியான ஃபேன்ஸ்!
சென்னை: மதுமிதாவுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன் விரைவில் அவரை சந்திப்பேன் என இயக்குநர் சேரன் தெரிவித்திருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மதுமிதா, காவிரி பிரச்சனை குறித்து பேசியதால் சக போட்டியாளர்களின் கோபத்திற்கு ஆளானார். இதனால் ஏற்பட்ட மோதலால் மன உளைச்சலுக்கு ஆளான மது, கத்தியால் கையை கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதனால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் மதுமிதா. இதனை தொடர்ந்து மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகமும், விஜய்டிவி மீது மதுமிதாவும் மாறி மாறி புகார் அளித்துக் கொண்டனர்.

யாராவது பேசினார்களா?
அண்மையில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபைனலுக்கு கூட மதுமிதாவை அழைக்கவில்லை. இந்நிலையில் மதுமிதாவிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் யாராவது பேசினார்களா என அவரது ரசிகர்கள் கேட்டு வந்தனர்.
விரைவில் சந்திப்பேன்
இந்நிலையில் இயக்குநர் சேரன் தான் மதுமிதாவுடன் பேசிக் கொண்டிருக்கிறேன் என்றும் விரைவில் சந்திப்பேன் என்று தன்னிடம் கேட்ட ரசிகர்களுக்கு பதில் அளித்துள்ளார்.
நம்புகிறோம்
சேரனின் இந்த டிவிட்டை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மது பிரச்சினையில் பொதுமக்களுக்கு நம்பிக்கை உங்கள் வார்த்தைகள் மட்டுமே. எப்படியும் சேனல் உண்மையை வெளிப்படுத்தாது. இங்கே யார் சரி அல்லது தவறு என்று தெரிந்து கொள்ள உங்கள் வார்த்தைகளை நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்துள்ளார் இவர்.
என்ன ஒரு நிம்மதி
ஓ.. ரொம்ப நன்றி சார்.. என்ன ஒரு நிம்மதி என தெரிவித்திருக்கிறார் இந்த ரசிகர்.
சேரனுக்கு நன்றி
மதுமிதாவின் கணவரான மோசஸும் நலம் விசாரித்தமைக்கு நன்றி சேரன் சார் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











