சரத்குமாருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன்... சமுத்திரகனி
இயக்குநர், நடிகர், சின்னத்திரை தொடர் தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் சமுத்திரக்கனி. தற்போது காமராஜர் படத்தில் நடித்துள்ளார்.
நட்புக்காக சில படங்களில் கவுரவத்தோற்றங்களில் நடித்துவரும் சமுத்திரகனி, சரத்குமாரின் சண்டமாருதம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
சரத்குமார் படத்தில் நடிப்பது அவருக்கு செலுத்தும் நன்றிக்கடன் என்றும் கூறியுள்ளார் சமுத்திரக்கனி. தன்னுடைய நடிப்பு பயணம் பற்றி அவர் கூறியுள்ளதை மேற்கொண்டு படியுங்களேன்.

காமராஜர் படத்தில்
காமராஜர் படத்தில், அவர் இறந்த பிறகு அவரது வீட்டிக்கு சென்று அவரது சொத்துக்களை கணக்கெடுக்கும் விருதுநகர் நகராட்சி அதிகாரியாக நடிக்கிறேன்.

மகத்தான தலைவனின் துண்டு
அங்கு 110 ரூபாய் பணம், ஒரு சில வேட்டி துண்டுகள், சில புத்தங்கள் மட்டுமே இருக்கிறது. மூன்று முறை முதல்வராக இருந்தும் தன் குடும்பத்தை வறுமையில் வைத்திருந்த மகத்தான தலைவனின் துண்டு ஒன்றை மட்டும் கேட்டு வாங்கி வருகிறேன்.
எனது பார்வையில் படம் தொடங்கி என் பார்வையில் முடிகிற மாதிரி அமைத்திருக்கிறார்கள். அந்த மகத்தான தலைவனுக்கு என்னால் முடிந்தது இது.

சரத்குமாருக்கு நன்றிக்கடன்
பூவரசம் பீ பீ எனது உதவியாளர் இயக்கிய படம் அதனால் நடித்துக் கொடுத்தேன். அடுத்து சரத்குமார் சாரின் சண்டமாருதம் படத்தில் நடிக்கிறேன். எனது நிமிர்ந்து நில் படத்தில் அவர் நடித்துக் கொடுத்தார். அதற்கான நன்றி கடனை தீர்க்கிறேன்.

தனுஷ் படத்தில்
தனுஷ் நடிக்கும் வேலையில்லா பட்டதாரியில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறேன். நீயெல்லாம் நல்லா வருவடா படத்திலும் முக்கியமான கேரக்டர். காடு என்ற படத்தில் காட்டை காக்கும் சமூக ஊழியனாக நடித்திருக்கிறேன்.

சமூகத்தில் மீது கோபம்
சமூகத்தின் மீது தீராத பல கோபங்கள் இருக்கிறது. அதனை எழுத்தாளனாக இருந்திருந்தால் எழுதி தீர்த்திருப்பேன். ஓவியனாக இருந்தால் வரைந்து தீர்த்திருப்பேன். சினிமா கலைஞனாக இருப்பதால் திரைப்படங்கள் மூலம் தீர்த்துக் கொள்கிறேன். கோபம் இன்றி இருக்கக்கூடிய சந்தர்ப்பந்தத்தை இந்த தேசம் எனக்குத் தரவில்லை.

நண்பரின் குடும்பம்
சமீபத்தில் ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை படம் பார்த்தேன். அந்த படம் என்னை ரொம்ப பாதித்தது. சென்னைக்கு நான் வந்த புதிதில் எனக்கு தங்க இடம் கொடுத்து சாப்பாடு போட்டு பராமரித்த நண்பன் குருசாமியின் நினைவு வந்தது.

என்னால் முடிந்த உதவி
சினிமாவில் எனக்கு நம்பிக்கையூட்டிவிட்டு அவன் நம்பிக்கை இழந்து செத்தும்போனான். அவன் நினைவு வந்ததும். அவன் ஊருக்குச் சென்றேன். குடும்பம் வறுமையில் இருந்தது. குருசாமி சினிமாவில் ஜெயித்திருந்தால் அந்த குடும்பத்துக்கு என்ன செய்வானோ அதை செய்ய முடிவெடுத்தேன். அதை செய்தும் வருகிறேன்.

என் உயரம் எனக்குத் தெரியும்
நான் ஹீரோவாக நடிக்கச் சொல்லி நிறைய பேர் கேட்டு வந்தார்கள். அவர்களுக்கு நல்லது சொல்லி அனுப்பி வைத்திருக்கிறேன். என் உயரம் எனக்குத் தெரியும்.


Click it and Unblock the Notifications











