செல்வராகவனுடன் யாராலும் வாழ முடியாது.. மனைவி கீதாஞ்சலி இப்படி சொல்லிட்டாங்களே ப்பா!

சென்னை: இயக்குநர் செல்வராகவன் முதலில் சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்து; பிறகு விவாகரத்து பெற்றார். அவரைத் தொடர்ந்து கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்தார். செல்வாவிடம் கீதாஞ்சலி உதவி இயக்குநராக பணியாற்றினார் என்றும் சொல்லப்படுகிறது. சூழல் இப்படி இருக்க அவர்கள் இரண்டு பேருக்கும் விவாகரத்து நடக்கவிருப்பதாக சில நாட்களாக தகவல்கள் வட்டமடிக்க ஆரம்பித்திருக்கின்றன.

தமிழ் சினிமாவின் லெஜெண்ட் இயக்குநர்களில் ஒருவர் என்று புகழப்படுபவர் செல்வராகவன். அவர் இயக்கிய காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன உள்ளிட்ட படங்கள் எல்லாம் இப்போதுவரை ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. தனுஷ் இன்று இந்த நிலைமையில் இருப்பதற்கு அவரது திறமை ஒரு காரணம் என்றாலும்; செல்வராகவன் முக்கியமான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷே இதை பல மேடைகளில் ஒத்துக்கொண்டிருக்கிறார்.

I Am the Best Wife for Selvaraghavan Says Geethanjali throwback interview Goes Viral
Photo Credit:

நடிகராக செல்வராகவன்: இயக்கத்தில் பீக்கில் சென்றுகொண்டிருந்த செல்வராகவன் திடீரென சறுக்கலை சந்தித்தார். அதனையடுத்து உடனடியாக நடிப்பில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். பீஸ்ட், சாணிக்காயிதம், பகாசூரன், ஆர்யன் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் இடையே தனுஷ் எழுதிய கதையை நானே வருவேன் என்ற பெயரில் இயக்கினார். அது பெரிய வெற்றியை பெறவில்லை. இருந்தாலும் அவர் மீண்டும் இயக்கத்தில் கவனத்தை செலுத்த வேண்டும் ரசிகர்கள் கோரிக்கை வைக்க; மீண்டும் அவர் இயக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் 7ஜி ரெயின்போ காலனி 2, மென்டல் மனதில் உள்ளிட்ட படங்களின் வேலைகள் நடந்துவருகின்றன.

பெர்சனல் வாழ்க்கை: மீண்டும் இயக்குநர் செல்வராகவனை பார்ப்பதற்கு ரசிகர்கள் பேராவலோடு இருக்கிறார்கள். இதற்கிடையே காதல் கொண்டேன், 7ஜி படங்களில் ஹீரோயினாக நடித்த சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார் செல்வா. சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள்; ஆயிரத்தில் ஒருவன் பட சமயத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். அந்த விவாகரத்துக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டன.

இரண்டாவது திருமணம்: சோனியா அகர்வாலை பிரிந்த செல்வராகவன்; அடுத்ததாக கீதாஞ்சலி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். செல்வாவிடம் கீதாஞ்சலி உதவி இயக்குநராக பணியாற்றினார். அப்போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. அந்தத் தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். சுமூகமாக போய்க்கொண்டிருக்கும் அவர்களது திருமண வாழ்க்கை இப்போது பேசுபொருளாகியிருக்கிறது. அதாவது தன்னுடைய இன்ஸ்டாகிராமிலிருந்து செல்வராகவன் தொடர்பான அனைத்து பதிவுகளையும் நீக்கினார்.

விவாகரத்தா?: அதை பார்த்த ரசிகர்களோ செல்வராகவனுக்கும், கீதாஞ்சலிக்கும் விவாகரத்து நடக்கவிருப்பதாக பேச்சுக்களை கிளப்பினார்கள். அதுமட்டுமின்றி ஆர்யன் பட ப்ரோமோஷனில் பேசியிருந்த செல்வா, 'கல்லறையில் என்னை புதைத்து பூக்களை வைத்துவிட்டார்கள்; ஆனாலும் நான் அதை உடைத்துவிட்டு வந்திருக்கிறேன். இன்னும் ஆறு மாதங்களில் ஒரு விஷயம் நடக்கும்' என சொன்னது தன்னுடைய விவாகரத்தைத்தான் என்றும் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

ட்ரெண்டாகும் பேட்டி: அதேசமயம் செல்வா தொடர்பான பதிவுகளை கீதாஞ்சலி நீக்கியிருந்தாலும்; சோஷியல் மீடியா கணக்கில் தனது பெயருக்கு பின்னால் இருக்கும் செல்வராகவன் பெயரை நீக்கவில்லை. இந்நிலையில் கீதாஞ்சலி சில வருடங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டி ஒன்றும் திடீரென ட்ரெண்டாகியிருக்கிறது. தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்திருந்த பேட்டியில், "செல்வராகவனுடன் என்னை தவிர்த்து யாராலும் வாழ முடியாது. நான்தான் அவருக்கு மிகச்சிறந்த மனைவி' என்றிருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இவ்வளவு தூரம் பேசியிருக்கும் கீதாஞ்சலி வேறு எந்த முடிவையும் அவசரத்தில் எடுத்துவிடக்கூடாது; இரண்டு பேரும் கடைசிவரை சேர்ந்து வாழ வேண்டும் என்று கோரிக்கை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X