என்னுடைய பயோ பிக்கில் இவர் நடித்தால் நன்றாக இருக்கும்.. விஜய் சேதுபதி சொன்ன அந்த நபர் யார் தெரியுமா?

சென்னை: தமிழ் சினிமாவையும் கடந்து விஜய் சேதுபதிக்கு தெலுங்கு மற்றும் பாலிவுட்டில் நாளுக்கு நாள் மார்க்கெட் உயர்ந்து கொண்டே செல்கிறது

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை அசால்ட்டாக செய்து முடிக்கும் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியாகும் பல திரைப்படங்கள் வசூலில் மாஸ் காட்டி வருகிறது

இந்த நிலையில் விஜய் சேதுபதியின் பயோ பிக்கில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என அவரே கூறியுள்ளார்

 துணிந்து வில்லன்

துணிந்து வில்லன்

பொதுவாக ஹீரோக்கள் பலரும் முன்னணி நடிகராக உயர்ந்த பிறகு வில்லன் கதாபாத்திரங்களில் குணசித்திர வேடங்களிலும் நடிக்க முன்வர மாட்டார்கள் ஏனென்றால் அவர்களது மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்த பிறகு நெகட்டிவ் ரோலில் நடித்தால் மார்க்கெட் குறைந்து விடுமோ என்ற பயத்தில் நடிகர்கள் அதுபோன்ற ரிஸ்க் எடுக்க மாட்டார்கள் ஆனால் நடிகர் விஜய் சேதுபதி அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் துணிந்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் போதே வில்லன் கதாபாத்திரத்திலும் குணச்சித்திர வேடங்களிலும் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். திரையில் மட்டும் அல்லாமல் நிஜத்திலும் மிக வித்தியாசமாக யோசிக்கும் விஜய் சேதுபதிக்கு இந்தியா முழுவதும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர்

 கத்தரினா கைஃப் ஜோடியாக

கத்தரினா கைஃப் ஜோடியாக

லோகேஷ் கநகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் பவானி என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்து மிரட்டிய விஜய் சேதுபதிக்கு தெலுங்கு மற்றும் பாலிவுட்டிலிருந்தும் படவாய்ப்புகள் வருகிறது. இந்தியில் கத்தரினா கைஃப் ஜோடியாக விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.

 கலக்கக் கூடியவர்

கலக்கக் கூடியவர்

காத்துவாக்குல ரெண்டு காதல், விடுதலை,மாமனிதன் உள்ளிட்ட படங்களில் தமிழில் நடித்து வரும் விஜய் சேதுபதி எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் மிகச்சிறப்பாக நடித்து கலக்கக் கூடியவர். ஆண்டவன் கட்டளை படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான கடைசி விவசாயி என்ற படத்தை தயாரித்த அதோடு ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இருந்தார்.

 நான் நடித்தால் மட்டுமே

நான் நடித்தால் மட்டுமே

இவ்வாறு விஜய் சேதுபதி செய்யும் ஒவ்வொன்றும் மிக வித்தியாசமாக இருக்க ஒருவேளை விஜய் சேதுபதியின் பயோ பிக் எடுக்கப்பட்டால் அதில் ஹீரோவாக யார் நடிக்க வேண்டும் என விஜய் சேதுபதியிடம் கேட்டபோது அவர் கொஞ்சம் கூட தாமதிக்காமல் என்னுடைய பயோபிக்கில் நான் நடித்தால் மட்டுமே அது சரியாக இருக்கும். மற்ற நடிகர்களில் யாரை சொல்வதென்று எனக்கு சரியாக தெரியவில்லை . ஒரு நிமிடம் கமல்ஹாசன் என் நினைவில் வந்து சென்றார் . ஆனால் என்னுடைய பயோ பிக்கில் நானே நடிக்கிறேன் அது தான் சரியாக இருக்கும் என அட்டகாசமான பதிலை அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X