twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய்க்காக மன்சூர் அலிகான் குரல் கொடுத்தாரா? ...இது எப்போ நடந்தது ?

    |

    சென்னை : விஜய்க்காக தான் குரல் கொடுத்ததாக மன்சூர் அலி கான் பேசியதை கேட்டு ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். எந்த படத்தில் விஜய்க்கு பதில் இவர் பேசினார். விஜய் வாய்சில் இவர் எப்படி பேசி இருப்பார். விஜய் ஏன் வாய்ஸ் கொடுக்கவில்லை, என்ன பிரச்சனை என ரசிகர்கள் யோசிக்க துவங்கி விட்டனர்.

    Recommended Video

    S. A. Chandrasekhar | விஜய் அரசியல் கட்சியில் இதுதான் பிரச்சனை | Filmibeat Tamil

    தயாரிப்பாளர் ராபின்சன் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த்ராஜ் இயக்கத்தில், விஜய் டிவி அசார், யோகிபாபு, மனிஷா ஜித் நடித்துள்ள காதல் காமெடி திரைப்படம் "கடலை போட பொண்ணு வேணும்". ஒரு இளைஞனின் காதல் தேடலாக இன்றைய இளைய தலைமுறையை கவரும் அழகான காதல் கதையாக, ஒரு இரவில் நடக்கும் கதையில், காமெடி நிறைந்த கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.

    விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன், ராதாரவி, தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்ட தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் இதில் கலந்துக் கொண்டு, ஆடியோவை வெளியிட்டனர்.

    ஹீரோவும் நானே... வில்லனும் நானே... அடுத்த அதிரி புதிரி வெற்றிக்கு தயாராகும் அஜித்! ஹீரோவும் நானே... வில்லனும் நானே... அடுத்த அதிரி புதிரி வெற்றிக்கு தயாராகும் அஜித்!

    இப்படி டைட்டில் வச்சா தான் வராங்க

    இப்படி டைட்டில் வச்சா தான் வராங்க

    நிகழ்ச்சியில் நடிகர் மன்சூர் அலிகான் பேசுகையில், கடலை போட ஒரு பொண்ணு வேணும் டைட்டில் நன்றாக இருக்கிறது. இப்படியெல்லாம் டைட்டில் வைத்தால் தான் இளைஞர்கள் சினிமாவுக்கு வருகிறார்கள். நான் ராஜாதிராஜா, குலோத்துங்க சோழன் பட டைட்டில் வைத்த போது, எல்லோரும் திட்டினார்கள். ஆனால் அந்தப்படம் ஜெயித்தது.

    பெரிய படங்களை தான் மக்கள் பாக்குறாங்க

    பெரிய படங்களை தான் மக்கள் பாக்குறாங்க

    இப்போதெல்லாம் பெரிய படத்திற்கு தான் கூட்டம் வருகிறது. விஜய் பீஸ்ட்டுக்கு வெயிட் பண்ணுகிறார்கள். அனிருத், சிவகார்த்திகேயன் கலக்குகிறார்கள். பெரிய படமெடுத்தால் தான் மக்கள் பார்க்க வருகிறார்கள். சின்ன படத்திற்கு வருவதில்லை. மத்திய அரசு மக்களிடம் வரி போட்டு எல்லாவற்றையும் பிடுங்கி விடுகிறது. மக்களிடம் பணமில்லை, மக்கள் சந்தோஷமாக இருந்தால் தானே படத்திற்கு வருவார்கள்.

    விஜய்க்கு நான் தான் குரல் கொடுத்தேன்

    விஜய்க்கு நான் தான் குரல் கொடுத்தேன்

    விஜய்யை ஷுட்டிங்கிலிருந்து வரி ஏய்ப்பு விசாரணை என கூட்டி போனார்களே அதை யாராவது கேட்டார்களா? நான் மட்டும் தான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். எல்லோரும் இணைந்து போராட வேண்டும். இந்த படத்தில் ஹீரோ- ஹீரோயின் நன்றாக நடித்துள்ளார்கள். இந்த கடலை போட பொண்ணு வேண்டும் ஜெயிக்க வாழ்த்துக்கள் என்றார்.

    இப்போ எதற்கு இதை பேசினார்

    இப்போ எதற்கு இதை பேசினார்

    2020 ம் ஆண்டு விஜய் நெய்வேலியில் மாஸ்டர் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது பிகில் பட வருமானம் தொடர்பான விவகாரத்தில் வரி ஏய்ப்பு நடந்ததாக கூறி ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் அலுவலகத்தில் ரெய்டு, விஜய்யிடம் சம்பளம் தொடர்பாக விசாரணை ஆகியன நடத்தப்பட்டது. இது நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்ட நிலையில் தற்போது, அதுவும் அதுவும் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஏன் சம்பந்தமே இல்லாமல் மன்சூர் அலிகான் பேசினார் என விழாவிற்கு வந்த அனைவரம் குழம்பி போயினர்.

    English summary
    In the Kadalai poda ponnu venum audio launch function, actor Mansoor Ali Khan stated that he was the only one raising his voice in support of Vijay.Nobody stood for Vijay in the tax defaulter enquiry issue. And he said that the audience watched only big-budget movies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X