சிம்புவின் ஆன்மீகப் பயணத்தின் பின்னணியில் சந்தானத்தின் ‘அட்வைஸ்’

சென்னை: காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்திற்கும், லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவுக்கும் இடையில் அப்படி ஒரு நட்பு கொடி கட்டிப் பறக்கிறது. சந்தானத்தை திரை உலகத்திற்கு அறிமுகப் படுத்தியதே சிம்பு தான்.

அது முதற்கொண்டு இருவரும் இணைந்த கைகளாகவே இருக்கிறார்கள். கால்சீட் பிரச்சினைகளால் இருவரும் சில படங்களில் சேர்ந்து நடிக்க முடியாத சூழல் உருவான போதிலும் கேமராவுக்குப் பின்னால் அவர்களின் நட்புத் தொடரவே செய்கிறதி.

இந்நிலையில் சமீபத்தில் சிம்பு மேற்கொண்ட ஆன்மீக சுற்றுப் பயணத்திற்கு பின்னால் தான் தான் காரணகர்த்தா என தெரிவித்துள்ளார் சந்தானம்.

விடுகதையா, இந்த வாழ்க்கை...

விடுகதையா, இந்த வாழ்க்கை...

சென்ற மாதத்தில் திடீரென காவி வேட்டி கட்டி ரஜினி ஸ்டைலில் இமய மலைப் பயணம் புறப்பட்டு ரசிகர்களை குழப்பத்தில் தள்ளினார் சிம்பு. பல்வேறு வதந்திகளுக்கு மத்தியில் மீண்டும் பத்திரமாகத் திரும்பி வந்து மீண்டும் தன் பட வேலைகளில் பிசியாகி விட்டார் சிம்பு.

நான் தான் காரணகர்த்தா...

நான் தான் காரணகர்த்தா...

இந்நிலையில், ‘நான் சொல்லித் தான் சிம்பு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டார்' எனக் கூறி ரசிகர்களின் குழப்பத்திற்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் சந்தானம்.

நான் ஆன்மீகவாதி....

நான் ஆன்மீகவாதி....

மேலும் இது குறித்து அவர் கூறியதாவது, ‘சிறு வயது முதலே எனக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் இது குறித்து சிம்புவிடம் பேசுவேன்.

நீ வேணும்னா ஆன்மீகப் பயணம் போயேன்...

நீ வேணும்னா ஆன்மீகப் பயணம் போயேன்...

சமீபத்தில் ஒருநாள் அவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போது, நான் தான் சிம்புவை ஆன்மீகப் பயணம் மேற்கொண்டால மனதுக்கு நல்லது என கூறினேன்.

என்னால போக முடியலப்பா...

என்னால போக முடியலப்பா...

உடனே, என்னையும் உடன் வருமாறு அழைத்த போதும், தொடர்ந்து பட வேலைகள் இருப்பதால் என்னால் உடன் செல்ல இயலவில்லை.

இதுல என்னங்க ஆச்சர்யம்?

இதுல என்னங்க ஆச்சர்யம்?

சரி, இதில் நான் ஆச்சர்யப் படுவதற்கு ஒன்றுமில்லை. சிம்பு ஆன்மீகப் பயணம் முடித்துத் தானே, திரும்பி வந்திருக்கிறார். நான்கைந்து கொலைகள் செய்து, ஜெயிலுக்கு சென்று விடுதலையாகவில்லையே' என சிரிக்கிறார் சந்தானம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X