கேங்ஸ்டர் படம் எடுத்து அலுப்பாயிடுச்சு... அடுத்தது காதல் கதைதான்... யாரு சொல்லியிருக்காரு தெரியுமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ளது நானே வருவேன் படம். இந்தப் படத்தை அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது நடிகராகவும் மாறியுள்ளார் செல்வராகவன்.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் அடுத்தடுத்த படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இவரது நடிப்பில் ஜகமே தந்திரம், கல்யாண கலாட்டா மற்றும் மாறன் என அடுத்தடுத்த படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகின. தற்போது அடுத்ததாக திருச்சிற்றம்பலம், நானே வருவேன் மற்றும் வாத்தி போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன்

செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன்

இதில் நானே வருவேன் படத்தை இயக்குநரும் தனுஷின் அண்ணனுமான செல்வராகவன் இயக்கியுள்ளார். படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை இயக்கும் நேரத்தில் நடிகராகவும் மாறியுள்ளார் இயக்குநர் செல்வராகவன்.

சங்கைய்யா கேரக்டர்

சங்கைய்யா கேரக்டர்

இவரது நடிப்பில் அடுத்தடுத்து சாணிக் காயிதம் மற்றும் பீஸ்ட் படங்கள் ரிலீசாகியுள்ளன. முதலில் அவர் கமிட்டானது சாணிக் காயிதம் படத்தில்தான். ஆனால் ரிலீசானது என்னவோ பீஸ்ட் படம். இரண்டு படத்திலும் அவர் தனது சிறப்பான நடிப்பை பதிவு செய்துள்ளார். குறிப்பாக சாணிக் காயிதத்தில் அவர் ஏற்று நடித்துள்ள சங்கைய்யா கேரக்டர் அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.

தயக்கத்தை கொடுத்த நடிப்பு

தயக்கத்தை கொடுத்த நடிப்பு

இந்தக் கேரக்டர் குறித்து பேசிய செல்வராகவன், ஆரம்பத்தில் நடிப்பது குறித்த தயக்கம் இருந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் அருண் மாதேஸ்வரன், இந்த கேரக்டரை உருவாக்கும் போதே தன்னை மனதில் வைத்து உருவாக்கியதாக கூறியது தனக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்தாகவும் செல்வராகவன் கூறியுள்ளார்.

சங்கைய்யாவின் வலி

சங்கைய்யாவின் வலி

மேலும் சூட்டிங்கின்போது தான் தன்னை சங்கைய்யாவாக நினைத்துக் கொண்டதாகவும், குழந்தையை பறிக்கொடுக்கும் தந்தையின் வலியை உள்வாங்கி நடித்ததாகவும் தெரிவித்துள்ளார். தற்போது தன்னுடைய நடிப்புக்கு ரசிகர்கள் சிறப்பான கமெண்ட்களை கொடுத்துவருவது தன்னை உற்சாகப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தன்னை போன்ற அருண் மாதேஸ்வரன்

தன்னை போன்ற அருண் மாதேஸ்வரன்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்திற்காக மெனக்கெடுவது குறித்தும் செல்வராகவன் பாராட்டு தெரிவித்துள்ளார். அவருடைய செயல்பாடுகள் 20 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை பார்ப்பது போல உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அருண் ஒருபோதும் ஒரு காட்சியை விவரிப்பதற்காக எந்த முயற்சியும் செய்ததில்லை என்றும் மாறாக அந்தக் காட்சிக்கு தேவையான உண்மையை நாமே பெற வைப்பதுதான் அவரது வெற்றி என்றும் செல்வராகவன் மேலும் கூறியுள்ளார்.

மாறியுள்ள சினிமாத்துறை

மாறியுள்ள சினிமாத்துறை

சினிமாத்துறை தற்போது மாறியுள்ளதாகவும், ரசிகர்களின் ரசனை மற்றும் படைப்புக்கான அவர்களின் பாராட்டு போன்றவையும் மாறியுள்ளதாகவும் செல்வராகவன் தெரிவித்துள்ளார். இதற்கு தற்போது பிரபலமாக உள்ள ஓடிடியும் முக்கிய காரணம் என்றும் செல்வராகவன் மேலும் கூறினார். உலகளவில் எந்தப் படத்தையும் பார்க்கும் வாய்ப்பு தற்போது அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனுஷின் மாற்றம்

தனுஷின் மாற்றம்

தொடர்ந்து பேசிய செல்வராகவன் 10 ஆண்டு இடைவெளிக்கு பிறகு தானும் தனுஷும் இணைந்துள்ள நானே வருவேன் படத்தின் கதை எளிதானதல்ல என்றும் ஆனால் தனுஷுடன் தற்போது பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். முன்பெல்லாம் ஒரு கேரக்டரை உள்வாங்க தனுஷுக்கு அதிக நேரம் பிடிக்கும் என்றும் ஆனால் தற்போது விநாடிகளில் அந்த கேரக்டராகவே மாறும் வித்தையை அவர் பழகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

காதல் கதையை இயக்கும் செல்வராகவன்

காதல் கதையை இயக்கும் செல்வராகவன்

கேங்ஸ்டர் படம் எடுத்து மிகவும் அலுப்பாகிவிட்டதாகவும் செல்வராகவன் இந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மாறாக உடனடியாக காதல் கதைகளை கையில் எடுக்க விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி உள்ளிட்ட காதல் கதைகளை செல்வராகவன் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X