நான் தல – தளபதியோட தீவிர ரசிகை...திடீர் புகழால் மாஸ் காட்டும் மாஸ்டர் பட நடிகை

சென்னை : தான் விஜய் - அஜித் இரண்டு பேருக்கும் பெரிய ரசிகை என இருவர் படங்களிலும் நடித்த நடிகையான நடிகை சுரேகாவாணி தெரிவித்துள்ளார்.

தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் சுரேகாவாணி. ஒரு சில இந்தி மற்றும் மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார். தமிழில் உத்தமபுத்திரன், ஜில்லா, வந்தா ராஜாவாதான் வருவேன், எதிர்நீச்சல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

2019 ல் வெளியான அஜித்தின் விஸ்வாசம் படத்திலும், சமீபத்தில் வெளியான விஜய் நடித்த மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். இருந்தாலும் கூட கடந்த சில நாட்களாக தான் அதிகமானவர்களால் பேசப்படும் நடிகையாகி உள்ளார்.

ஹிட்டான நீக்கப்பட்ட காட்சிகள்

ஹிட்டான நீக்கப்பட்ட காட்சிகள்

மாஸ்டர் படம் தியேட்டர் மற்றும் அமேசான் பிரைமில் என்ன தான் ஹிட்டானாலும், தற்போது வெளியிடப்பட்டுள்ள நீக்கப்பட்ட காட்சிகள் தான் அதிக பிரபலமாகி வருகிறது. குறிப்பாக தோனி பற்றி விஜய் பேசும் வசனம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

நன்றி சொன்ன சுரேகா

நன்றி சொன்ன சுரேகா

மாஸ்டர் படத்தில் சுரேகா நடித்த காட்சிகள் தியேட்டரில் வெளியிடப்பட்டதில் நீக்கப்பட்டிருந்தது. ஆனால் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட மாஸ்டர் படத்தில் சுரேகா நடித்த காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதற்காக படக் குழுவினருக்கும், விஜயுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தற்கும் அவர் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

நான் தல–தளபதி ரசிகை

நான் தல–தளபதி ரசிகை

நேற்று மாஸ்டர் படக் குழுவிற்கு நன்றி தெரிவித்த சுரேகா, இன்று விஜய்யின் மாஸ்டர் பட போட்டோவையும், அஜித்துடன் தான் எடுத்துக் கொண்ட போட்டோவையும் இணைத்து அவர் பதிவிட்டுள்ளார். அத்துடன் தான் இருவரின் மிகப் பெரிய ரசிகை எனவும், இருவருடனும் நடிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்துள்ளதாகவும் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

இரு தரப்பு ரசிகர்களும் வரவேற்பு

இரு தரப்பு ரசிகர்களும் வரவேற்பு

இதனால் அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரின் ரசிகர்களிடத்திலும் சுரேக்காவிற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இரு தரப்பு ரசிகர்களும் சுரேகாவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X