என்னை விபச்சாரி என்று அழைக்கிறார்கள்.. போட்டோவை போட்டு டாக்டரின் முகத்திரையை கிழித்த பிரபல பாடகி!

சென்னை: என்னை விபச்சாரி என்கிறார்கள், தனிப்பட்ட முறையில் திட்டுகிறார்கள் என பிரபல பாடகியான சின்மயி வேதனை தெரிவித்துள்ளார்.

பிரபல பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி, வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி கடந்த 2018 ஆண்டு மீடூவில் புகார் கூறினார். சின்மயின் புகார் தமிழ் திரைத்துறையில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

சின்மயின் இந்த புகாருக்கு எதிர்ப்பும் ஆதரவும் ஒருசேர எழுந்தது. தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார் சின்மயி.

சின்மயி விமர்சனம்

சின்மயி விமர்சனம்

தொடர்ந்து தனது சமூக வலைதளபக்கத்தில் வைரமுத்துவை விளாசி வருகிறார் சின்மயி. வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதையும் கடுமையாக விமர்சித்தார். மேலும் பாலச்சந்தர் சிலை திறப்பு விழாவுக்கு நடிகர் கமல்ஹாசன் வைரமுத்துவை அழைத்ததை கூட கடுமையாக விமர்சித்தார்.

சின்மயிக்கு எதிர்ப்பு

சின்மயிக்கு எதிர்ப்பு

ஆனால் டிவிட்டரில் சின்மயிக்கு ஆதரவாக சிலர் பேசினாலும் பெரும்பாலனோர் வைரமுத்துவுக்கு ஆதரவாகவே பேசி வருகின்றனர். சின்மயி தமிழ் மட்டுமின்றி மற்ற இந்தி, தெலுங்கு, மலையாள சினிமாத்துறையில் பாலியல் தொல்லைகளை சந்தித்து வருபவர்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

சாதியை வைத்தும்..

சாதியை வைத்தும்..

இதனால் சின்மயியை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து வருவது தொடர் கதையாகி வருகிறது. சமூக வலைதளங்களில் குறிப்பாக அவரது சாதியை வைத்தும் இழிவான சொற்களாலும் அவரை விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

படிக்காதவர்கள்..

இந்நிலையில் சமூக வலைதளங்களில் தன்னை இழிவான வார்த்தைகளால் விமர்சிப்பதாக பாடகி சின்மயி வேதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் கருத்து வேறுபாட்டின் ஒரு வடிவமாக துஷ்பிரயோகம் செய்வது என்பது ‘படிக்காதவர்கள்' செய்யும் ஒன்று என்று பலர் நம்புகிறார்கள்;

முற்றிலும் மாற்றுவது போல

முற்றிலும் மாற்றுவது போல

இந்த ‘படிக்காத' கருத்து நம்மில் பலரிடமிருந்து வந்திருக்கிறதா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, ஏனென்றால் நாம் சலுகை பெற்றவர்கள்; கல்வி ஒருவரின் நடத்தையை முற்றிலும் மாற்றுவது போல என பதிவிட்டுள்ளார்.

விபச்சாரி என்று அழைக்கிறார்கள்

இதேபோல் மற்றொரு டிவிட்டில், நான் ஒரு விபச்சாரி என்று அழைக்கப்படுவது பழக்கமாகிவிட்டது; சமூக ஊடக தொடர்புகள் மற்றும் தனிப்பட்ட முறையில் என்னை ஒரு சேரி என்று அழைத்தவர்கள் ஆண்கள். பல இழிவான கருத்துகளும் ஆண்களிடமிருந்து வந்தவை. ‘எல்லா ஆண்களும் குப்பை' அல்லது ‘ஆண்கள் குப்பை' என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. " என பதிவிட்டுள்ளார்.

ஸ்க்ரீன் ஷாட்

ஸ்க்ரீன் ஷாட்

மேலும் தன்னை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதையும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் சின்மயி. தெலுங்கு படிக்க தெரிந்தால் உங்களுக்கு புரியும் என்று குறிப்பிட்டு தன்னை திட்டியவர்களின் போட்டோக்களோடு ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஷேர் செய்துள்ளார்.

மருத்துவர்

அவர்களில் ஒருவர் விஸ்வபாரதி மருத்துவக் கல்லூரியில் மருத்துவர்; மற்ற அனைவரும் பட்டதாரிகள் அல்லது பட்டதாரி மாணவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்கள் அனைவரும் நான் துஷ்பிரயோகம் செய்ய தகுதியானவர் என்று நம்புகிறார்கள், அவர்கள் சொல்வது சரிதான் என்றும் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Read more about: chinmayi சின்மயி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X