நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுள்ளேன்.. எஸ்பிபியை சந்தித்த பிறகு பாரதிராஜா குரல் தழுதழுக்க பேட்டி!

சென்னை: எஸ்பி பாலசுப்ரமணியத்தை நேரில் சந்தித்த இயக்குநர் பாரதிராஜா தான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் தனியார் மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது.

மருத்துவமனையின் இந்த அறிக்கை ரசிகர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எஸ்பி பாலசுப்ரமணியத்தை நேற்று நடிகர் கமல்ஹாசன் நேரில் சந்தித்தார்.

செய்தியாளர் சந்திப்பு

செய்தியாளர் சந்திப்பு

இதனை தொடர்ந்து இன்று இயக்குநரும் எஸ்பிபியின் நெருங்கிய நண்பருமான பாரதிராஜா மருத்துவமனைக்கு நேரில் சென்றார். எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து பேசிய அவர் பின்னர் அங்கு கூடியிருந்த செய்தியாளர்களை சந்தித்தார்.

உணர்ச்சிவசப்பட்டுள்ளேன்

உணர்ச்சிவசப்பட்டுள்ளேன்

அப்போது அவர் பேசியதாவது, பாலு என்னுடைய 50 வருட கால நண்பன். சில சூழ்நிலைகளில் வார்த்தை வராது. துக்கத்தில் இருக்கும் போதும் வருத்தத்தில் இருக்கும் போதும் வார்த்தைகள் வராது. நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுள்ளேன்.

குரல் தழுக்க

குரல் தழுக்க

உலக தமிழர்கள் அனைவரும் அவர் மீண்டும் எழுந்து வர வேண்டி பிரார்த்தனை செய்தார்கள். நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது. இன்னமும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. பாலு சிறந்த கலைஞன் மட்டுமின்றி அற்புதமான மனிதரும் ஆவார். இவ்வாறு இயக்குநர் பாரதிராஜா குரல் தழுதழுக்க பேசினார்.

Recommended Video

SPB உடல் நலக் குறைவு காரணமாக மதியம் 1.04 மணிக்கு காலமானார்
ரசிகர்கள் வருகை

ரசிகர்கள் வருகை


இதனிடையே எஸ்பி பாலசுப்ரமணியம் சிகிச்சை பெற்றுவரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்கு எஸ்பிபியின் ரசிகர்களும் வரத்தொடங்கி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X