twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்க்க ஆவலோடு இருக்கிறேன்.. கல்கியின் பேத்தி சொல்லும் சுவாரஸ்யம்!

    |

    சென்னை: இயக்குநர் மணிரத்னம், கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலை திரைப்படமாக இயக்கியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

    இந்த நாவல் 1950 - 1955 ஆம் ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது, பல்வேறு நாடகக் குழுக்களால் நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டுள்ளது.

    பொன்னியின் செல்வனை திரைப்படமாக பார்க்க ரசிகர்கள் மட்டும் இல்லாமல், கல்கியின் பேத்தி கௌரியும் பெரும் அவளோடு காத்து கொண்டு இருக்கின்றனர்.

    மணிரத்னம் பண்ண வேலையை பார்த்து ராஜமெளலியே ஷாக் ஆகிட்டாரு.. ஜெயம் ரவி சொன்ன சூப்பர் விஷயம்! மணிரத்னம் பண்ண வேலையை பார்த்து ராஜமெளலியே ஷாக் ஆகிட்டாரு.. ஜெயம் ரவி சொன்ன சூப்பர் விஷயம்!

     பொன்னியின் செல்வன் நாவலை எழுதக் என்ன காரணம்

    பொன்னியின் செல்வன் நாவலை எழுதக் என்ன காரணம்

    எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ் பெற்ற வரலாற்று நாவல் 'பொன்னியின் செல்வன்' உண்மை கதாபாத்திரங்களையும் சில கற்பனை கதாபாத்திரங்களையும் அடிப்படையாக வைத்து கற்பனையாக உருவாக்கிய தமிழ் நாவலாகும். கி பி 1000 ஆம் ஆண்டு இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் நாவல் எழுதப்பட்டிருக்கிறது. நாவலில் பொன்னியின் செல்வன் தனக்கு வந்த ராஜ்யத்தை இது எனக்கு உரிமை இல்லை; முறைப்படி என்னுடைய சித்தப்பாவிற்கு போக வேண்டிய ராஜ்ஜியம் என்று தனக்கு வந்த பதவியை முற்றிலுமாக துறந்து விடுகிறார். அந்த தியாகத்தை எழுத்தாளர் கல்கிக்கு மிகவும் பிடித்து போனதின் காரணமாக தான், பொன்னியின் செல்வன் என்ற நாவலை எழுதத் தூண்டியதாக கல்கியின் பேத்தி "கௌரி" கூறியிருக்கிறார்.

     கல்கியின் பேத்தி கௌரி-யின் பார்வையில்

    கல்கியின் பேத்தி கௌரி-யின் பார்வையில்

    "பொன்னியின் செல்வன்" நாவல் போர் குணத்தை வளர்க்கின்ற நாவலாக தான் பெரும்பாலான வாசகர்களின் விமர்சனமாக இருக்கிறது, ஆனால் கவனமாக படித்து பார்த்தால் அதில் போர் மிகவும் கம்மியாகத்தான் வரும்; அமைதி, சாந்தம், சாந்திரியும் புத்திசாலித்தனம் மற்றும் ஒருவருக்கொருவர் உதவும் மனப்பான்மை தான் அதிகமாக இருக்கும் ; வீரம் என்பது போர்க்களத்தில் இருக்கின்ற வீரத்தைவிட மனதில் இருக்கின்ற வீரமே மிக பெரியது என்று போற்றி இருக்கிறது.

     பெண்களை அணுகும் விதம்

    பெண்களை அணுகும் விதம்

    கல்கி பெண்களை அனுகியிருக்கிற விதமே மிகவும் சிறப்பாக இருந்திருக்கிறது, முக்கிய பெண் கதாபாத்திரமான குந்தவை, பூங்குழலி, நந்தினி அவர்கள் புத்தி கூர்மையில் மிகவும் சிறப்பானவர்களாகவும், குந்தவி ஆணாகப் பிறந்திருந்தால் இந்த சபையில் இருக்கும் எல்லாரும் அவருக்கு கைகட்டி அவர் சொல்வதை கேட்கக் கூடியவர்களாக இருந்திருப்போம் என்றும், மனிதர்களின் குணத்தை கணித்து அவர்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள்வதில் மிக சிறந்த ஆளுமையாக இருந்திருக்கிறார்.

     திரைப்படமாக எடுக்க முயற்சித்த கலைஞர்கள்

    திரைப்படமாக எடுக்க முயற்சித்த கலைஞர்கள்

    ஆரம்ப காலகட்டத்தில் இந்த நாவலை படித்த நடிகர் எம்ஜிஆர், கமல்ஹாசன் போன்ற மிகப் பெரிய நடிகர்கள் திரைப்படமாக எடுக்க முயற்சித்தார்கள், ஆனால் கால சூழ்நிலை காரணத்தால் அவர்களால் இதை திரைப்படமாக எடுக்க முடியவில்லை; இயக்குநர் மணிரத்னத்திற்கு இந்தத் திரைப்படத்தை எடுப்பதற்கு மிகுந்த மன உறுதியும், துணிவும் அசாத்தியமான தைரியம் இருந்திருக்க வேண்டும், அதனால் தான் அவர் வெற்றிகரமாக எடுத்து முடித்திருக்கிறார் என்று பாராட்டியதோடு இந்த திரைப்படத்தை திரையில் பார்ப்பதற்கு மிகவும் ஆவலோடு இருக்கிறேன் என்று கல்கியின் பேத்தி "கௌரி" சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார். இப்படத்தை பற்றிய ஸ்வாரஸ்ய தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கும் இந்நிலையில் இவர் பேசிய இந்த பதிவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    English summary
    It is a well-known fact that director Mani Ratnam has directed Kalki's novel "Ponniyin Selvan" as a movie. The novel was serialized in Kalki Weekly magazine from 1950 - 1955 and became a huge hit among the masses and was also staged as a play by various theater groups. Not only fans are waiting to see Ponniyin's Selvan as a movie, but also Kalki's grand daughter Gauriyam is eagerly waiting.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X