சாதாரண மனுஷன் அப்படி செய்ய முடியாது… விஜய்யை புகழ்ந்த அபர்ணா தாஸ்

சென்னை : நடிகர் விஜய் நடித்த Beast படம் ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீசானது.Beast படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளியானாலும் படத்தின் வசூல் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை.

இதற்கிடையில் பீஸ்ட் படத்தில் நடித்த நடிகையான அபர்ணா தாஸ் விஜய் நடனத்தை குறிப்பிட்டு ஒரு தகவலை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அபர்ணா தாஸ் இந்த படத்தில் நடித்த காரணித்தினால் படம் வெளி ஆகும் முன்பே இவர் மீது நிறைய எதிர்பார்ப்புகள் கூடின. இவரது போட்டோ கிளிக்ஸ் நிறைய சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்யப்பட்டது.

யார் இந்த பெண் ?

யார் இந்த பெண் ?

Beast படத்தின் ரிலீசுக்கு முன்பு படத்தின் ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கான போஸ்டர்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. நடிகர் விஜய் டிரம்ஸ் வாசிப்பது போன்று அமர்ந்திருக்க அவரை சுற்றி கதாநாயகி பூஜா ஹெக்டே, யோகி பாபு, கிங்ஸ்லி, விடிவி கணேஷ் மற்றும் அபர்ணா தாஸ் நின்று இருப்பது போன்ற புகைப்படம் பலராலும் ஷேர் செய்யப்பட்டது. அப்போது யார் இந்த நடிகை என ரசிகர்களால் பேசப்பட்டவர் அபர்ணா தாஸ். தற்போது விஜய் படத்தில் நடித்திருக்கும் இவர் ஆரம்ப காலகட்டத்தில் டிக் டாக் வீடியோக்கள் மூலம் ரசிகர்களை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டிக் டாக் பிரபலம்

டிக் டாக் பிரபலம்

Njan prakasham படத்தின் மூலம் மலையாள திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அபர்ணா தாஸ். இவரது டிக் டாக் வீடியோக்களை பார்த்து இவருக்கு இந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறார் இயக்குனர் sathya anthikad. அதன் பிறகு 2019ஆம் ஆண்டு ரிலீசான மனோகரன் படத்தில் முழுநீள கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்தார் நடிகை அபர்ணா தாஸ். இதில் வினித் சீனிவாசன் , இந்திரன் மற்றும் Basil Joseph நடித்துள்ளனர். காமெடி டிராமா வாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது.

Beast படத்தில் அபர்ணா

Beast படத்தில் அபர்ணா

Beast திரைப்படத்தில் விஜய் பூஜா ஹெக்டே உடன் சேர்ந்து நடித்திருப்பவர் அபர்ணா. சமீபத்தில் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடிய இவர் Beast படத்தில் தன்னுடன் நடித்த நடிகர்கள் பற்றி தனது கருத்தை பகிர்ந்துள்ளார். நடிகர் விஜய் பற்றி பேசும் போது ' the best and sweet ' என புகழ்ந்து உள்ளார். ஹீரோயின் பூஜா ஹெக்டே பற்றி பேசும்போது மிகவும் இனிமையானவர். நகைச்சுவை உணர்வு உள்ளவர். அவரை மறுபடியும் சந்திக்க ஆர்வமாக உள்ளேன். மிகவும் கியூட், வேலையில் மிகவும் ஈடுபாடு உள்ளவர் என பாராட்டியுள்ளார்.

விஜய் சாதாரண மனிதர் இல்லை

விஜய் சாதாரண மனிதர் இல்லை

சமீபத்தில் நடிகை அபர்ணா தாஸ் ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் நடிகர் விஜய் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். Beast படத்தில் வரும் ஜாலியோ ஜிம்கானா பாடலில் ஒரு குறிப்பிட்ட நடன அசைவு முடிந்ததும் தான் சென்று விஜய்யை தொட்டுப்பார்த்து கொண்டதாகவும், அதை தனது நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதாகவும் பேசியுள்ளார். அதோடு எந்த ஒரு Rehearsal இல்லாமல் அவரு இவ்வளவு சிறப்பாக நடனமாடுவது வியப்பாக உள்ளதாகவும், ஒரு சாதாரண மனிதர் இது போல செய்ய முடியாது எனவும் உணர்வுபூர்வமாக தனது கருத்தை பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X