டெர்மினேட்டர்:டார்க் ஃபேட் ட்ரெய்லர் ரிலீஸ் - அர்னால்டு ரசிகர் ஆர்யா பெருமிதம்

Recommended Video

Arya Vs Ramya | Terminator Dark Fate Tamil Trailer Launch

சென்னை: நான் அர்னால்டின் மிக பெரிய ரசிகன். அவரைப் போல கட்டுமஸ்தான உடற்கட்டு வேண்டும் என்று கடுமையாக பயிற்சி எடுத்துள்ளேன். எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் அர்னால்ட் தான் மிக பெரிய உத்வேகம் என்று கூறியுள்ளார் ஆர்யா. ஆர்யா என்றாலே சைக்ளிஸ்ட் என்று சொன்னாலே போதுமானது என்றும் கூறியுள்ளார்.

டெர்மினேட்டர் டார்க் ஃபேட் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் ஆர்யா, நான் மற்றவர்களுக்காகவோ அல்லது விளம்பரத்திற்காகவோ எதுவும் செய்வதில் விருப்பமில்லை. எனக்கு சைக்ளிங் மீது தான் மிகுந்த ஆர்வம் என்று கூறியுள்ளார்.

30 வருடங்கள் ஆனபின்னும் இன்றும் நமக்குள் ஒரு தாக்கத்தையும் அதிர்வையும் ஏற்படுத்தக் கூடிய திரைப்படம் என்றால், அது டெர்மினேட்டர் திரைப்படம் தான். இன்றும் மக்களிடம் இந்த படத்தின் மீதான ஈர்ப்பு சிறுதும் குறையவே இல்லை. இன்னும் சொல்லப் போனால், அந்த எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே தான் போகிறது என்றால் அது மிகையல்ல. இப்படம் பல பாகங்களில் வெளியானாலும் இன்றும் மக்களின் மனதை, குறிப்பாக இளைஞர்களின் ரியல் ஹீரோ என்று கருதக்கூடியவர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர். டெர்மினேட்டர் என்ற படத்தின் பெயரை கேட்டவுடனேயே, நமது கண்ணுக்கு முன் ஃபிளாஷ் அடித்து செல்பவர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் தான்.

இமாலய வளர்ச்சி

இமாலய வளர்ச்சி

இப்படத்தின் வளர்ச்சி மட்டுமல்ல அர்னால்டின் திரையுலக வளர்ச்சியும், அரசியல் வளர்ச்சியும் யாராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாத வளர்ச்சி. சினிமா துறையில் ஹாலிவுட் சினிமா மட்டுமின்றி உலக சினிமா கூட அவரின் இமாலய வளர்ச்சியை பார்த்து வியப்படைந்துள்ளது. அவர் என்றுமே அனைவருக்கும் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர்

அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர்

அர்னால்ட் என்றாலே அவரின் கட்டுமஸ்தான உடல் வாகு தான். ஒவ்வொரு இளைஞருக்கும் அவரைப் போல உடல் அமைப்பு பெற வேண்டும் என்று கடுமையாக உடற்பயிற்சி செய்பவர்கள் இன்றும் உள்ளனர். இன்றும் உடற்பயிற்சி கூடங்களில் அவரின் புகைப்படம் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு ஒரு சூப்பர் ஹீரோ. திரையுலகில் நுழைவதற்கு முன்னரே அவர் உடற்பயிற்சி மேற்கொண்டு வலிமையான உடல் பலம் பெற்று இருந்தவர். சினிமா துறையில் நுழைந்தவுடன் உடற் கட்டமைப்பையும் நடிப்பையும் இணைத்து பல சாகசங்கள் புரிந்தவர்.

டெர்மினேட்டர் டார்க் ஃபேட்

டெர்மினேட்டர் டார்க் ஃபேட்

பல வருடங்கள் களித்து அர்னால்ட், டெர்மினேட்டர் டார்க் ஃபேட் என்ற 6ஆவது பாகத்தில் நடித்திருப்பது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. இது ஜட்ஜ்மெண்ட் டே பாகத்தின் தொடர்ச்சி என்று கூறப்படுகிறது. டெர்மினேட்டர் - ஜட்ஜ்மெண்ட் டே படத்திற்கு பிறகு அர்னால்ட்-ஜேம்ஸ் கேமரூன் இருவரும், இந்த படத்தின் மூலம் மீண்டும் இணைவது மற்றுமொரு பெரிய மகிழ்ச்சி.

ஹஸ்தல விஸ்தல பேபி

ஹஸ்தல விஸ்தல பேபி

டெர்மினேட்டர் படங்களின் பிளஸ் பாயிண்ட் என்னவென்றால் அந்த படத்தில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். வில்லன் முதல் துணை நடிகர்கள் வரை அனைவருமே பேசப்படுவர் என்பது தான் அந்த படங்களில் ஸ்பெஷல். மேலும் அர்னால்ட் பேசும் சில வசனங்கள் கூட மக்கள் மனதில் மிகவும் பிரபலம். குறிப்பாக ஹஸ்தல விஸ்தல பேபி என்ற வசனம் மிகவும் பிரபலம்.

6 இந்திய மொழிகளில் வெளியீடு

6 இந்திய மொழிகளில் வெளியீடு

இதுவரையில், எந்த ஒரு ஹாலிவுட் திரைப்படமும் 3 அல்லது 4 மொழிகளுக்கு மேல் வெளியிடப்படாது. ஆனால் ஹாலிவுட் திரைப்படங்களில் முதல் முறையாக டெர்மினேட்டர் டார்க் ஃபேட் திரைப்படம் 6க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது.

ட்ரெய்லர் வெளியீடு

ட்ரெய்லர் வெளியீடு

இப்படத்தை பற்றின ஒரு நிகழ்ச்சி சமீபத்தில் கேரளாவில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் டோவினோ தாமஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டார். ஆந்திராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெலுங்கு முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா இப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டார். சென்னையில் நேற்று மாலை சத்யம் சினிமாஸில் இந்த படத்திற்கான ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஆர்யா கலந்து கொண்டு ட்ரைலரை வெளியிட்டார்.

நான் அர்னால்டின் ரசிகன்

நான் அர்னால்டின் ரசிகன்

இந்நிகழ்ச்சியில் ஆர்யா பேசுகையில் நான் அர்னால்டின் மிக பெரிய ரசிகன். அவரைப் போல கட்டுமஸ்தான உடற்கட்டு வேண்டும் என்று கடுமையாக பயிற்சி எடுத்துள்ளேன். எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் அர்னால்ட் தான் மிக பெரிய உத்வேகம் என்றார். மேடையில் ஆர்யாவிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அர்னால்டை சந்தித்தீர்களா என்று கேட்டதற்கு நடிகர் ஆர்யா, இதுவரையில் என்னால் அவரை சந்திக்க முடியவில்லை. ஆனால் நிச்சயம் அவரை ஒரு நாள் நேரில் சந்தித்து வாழ்த்து கூறுவேன்.

சைக்ளிங் ஆர்வம்

சைக்ளிங் ஆர்வம்

20 வருடத்திற்கு பிறகு நம் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் இந்த விருதினை பெற்றிருப்பது ஒரு பெருமைக்குரிய விஷயம். ஸ்போர்ட்ஸ் மீது உள்ள ஆர்வம் குறித்து கேட்டதற்கு நான் மற்றவர்களுக்காகவோ அல்லது விளம்பரத்திற்காகவோ எதுவும் செய்வதில் விருப்பமில்லை. எனக்கு சைக்ளிங் மீது தான் மிகுந்த ஆர்வம். ஆர்யா என்றால் ஒரு சைக்ளிஸ்ட் என்று சொன்னாலே போதுமானது என்றார். நம்பர் 1ஆக இருக்க வேண்டும் என்றெல்லாம் எனக்கு ஆசையில்லை. மற்றபடி அனைவரும் உடல் ஆரோக்கியத்தோடு நலமாகவும் இருக்க வாழ்த்துக்கள் என்றார்.

அர்ஜூனன் விருது

அர்ஜூனன் விருது


சென்னை ராமவரத்தை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் உடற் வலிமைக்காக அர்ஜுனன் விருதினை பெற்றுள்ளார்.
40 வயதிற்கு மேல் இருந்தாலும் இன்றும் அவரின் உடல் வலிமையால் அர்ஜுனன் விருதினை பெற்றிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார் பாஸ்கரன்.

ஆர்யா ரம்யா உடற்பயிற்சி

ஆர்யா ரம்யா உடற்பயிற்சி

இந்த நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளினி ரம்யா தொகுத்து வழங்கினார். இதில் ஸ்பெஷல் என்னவென்றால் ரம்யா அர்னால்டை போல் பிளாக் அண்ட் பிளாக் உடையில் வந்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். மேடையில் ஆர்யாவும் ரம்யாவும் இணைந்து உடற்பயிற்சி செய்தது, அங்கு கூடியிருந்த பார்வையாளர்களை நகைச்சுவையில் ஆழ்த்தினாலும் நிகழ்ச்சியை குதூகலமாய் நகர்த்தியது. திரையரங்குகளில் வரும் நவம்பர் 1ஆம் தேதியன்று வெளியாக இருக்கும் டெர்மினேட்டர் சீரிஸின் 6ஆவது பாகமான டெர்மினேட்டர் டார்க் ஃபேட் திரைப்படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் அர்னால்டு ரசிகர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X