நெல்சன், லோகேஷ் கனகராஜ் பார்க்கும்போது எனக்கு பொறாமையா இருக்கு !
சென்னை : மாநாடு மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான மன்மதலீலை இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது
தமிழ் படங்களை இயக்கி வந்த வெங்கட் பிரபு முதல் முறையாக தெலுங்கிலும் அறிமுகமாக அதில் நாக சைதன்யா ஹீரோவாக நடிக்கிறார்.
இந்த நிலையில் நெல்சன்,லோகேஷ் கனகராஜ் , விக்னேஷ் சிவன் உள்ளிட்ட இளம் இயக்குநர்களை பார்க்கும் போது எனக்கு பொறாமையாக இருக்கிறது என வெங்கட்பிரபு பேசியுள்ளார்.

பிளாக்பஸ்டர் வெற்றி
கலகலப்பான காமெடி இளமை துள்ளலான காட்சிகள் என தனது ஒவ்வொரு படங்களிலும் ரசிகர்களை குஷிப்படுத்திய இயக்குனர் வெங்கட்பிரபு சென்னை 600028 மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து சரோஜா,கோவா என வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அஜித் ஹீரோவாக நடித்த மங்காத்தா படத்தை இயக்கினார். அஜித்தின் 50வது படமாக வெளியான மங்காத்தா பிளாக்பஸ்டர் வெற்றி பெற்று பல வசூல் சாதனைகளை செய்து அதன் பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி வெங்கட் பிரபு கார்த்திக்கு பிரியாணி, சூர்யாவுக்கு மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட படங்களை கொடுத்தார்.

புதிய முயற்சியாக
இந்த நிலையில் சிம்பு உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்த மாநாடு பல்வேறு தடைகளையும் தாண்டி சென்ற வருடம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதுவரை கலகலப்பான காமெடி படங்களையும் இளமை துள்ளலான படங்களையும் இயக்கி வந்த வெங்கட் பிரபு முதல் முறையாக டைம் லூப் பாணியில் இயக்கிய மாநாடு ரசிகர்களுக்கு சர்ப்ரைசாக இருந்தது. தமிழ் சினிமாவில் பெரும்பாலும் யாரும் முயற்சிக்காத புதிய முயற்சியாக மாநாடு இருந்ததால் ரசிகர்கள் கொண்டாடினர் படமும் மாபெரும் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து அசோக் செல்வன் நடிப்பில் மன்மத லீலை வெங்கட்பிரபுவுக்கு சமீபத்தில் வெளியானது

இளம் இயக்குனர்கள்
இதுவரை தமிழ் சினிமாவில் மட்டும் கலக்கிக் கொண்டிருந்த வெங்கட்பிரபு முதல் முறையாக தெலுங்கில் அறிமுகமாகிறார். நாக சைதன்யா ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் இயக்குனராக வெங்கட்பிரபு ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் வெங்கட்பிரபு கூறியுள்ளதாவது இப்போது உள்ள இளம் இயக்குனர்கள் நெல்சன், லோகேஷ் கனகராஜ்,விக்னேஷ் சிவன் ரொம்ப அன்யோன்னியமாக ஜாலியாக இருக்கின்றார்கள்.

பொறாமையா இருக்கு
ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டு செம ஃபன்னா இருக்காங்க. அவங்கள பாக்கும்போது எனக்கு கொஞ்சம் பொறாமையா இருக்கு. நான் அவங்களுக்கு சீனியரா வேற போயிட்டேன் அதனால என்ன அங்க கூட சேர்த்துக்க மாட்டாங்க என இளம் இயக்குனர்கள் பற்றி வெங்கட் பிரபு கூறியுள்ளது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











