கனவுகள் நிஜமாகும்.. அண்ணன் விஜய் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி.. மனம் திறந்த சாந்தனு!

நடிகர் விஜய் படத்தில் நடிப்பதன் மூலம் தன்னுடைய கனவு நினைவாகிவிட்டது என்று நடிகர் சாந்தனு டிவிட் செய்துள்ளார்.

சென்னை: நடிகர் விஜய் படத்தில் நடிப்பதன் மூலம் தன்னுடைய கனவு நினைவாகிவிட்டது என்று நடிகர் சாந்தனு டிவிட் செய்துள்ளார்.

விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தில் நடிகர் சாந்தனு இணைந்துள்ளார். இந்த படத்தில் கல்லூரி மாணவராக சாந்தனு நடிக்கிறார்.

இதே கல்லூரியில் பேராசிரியர் ரோலில்தான் விஜய் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் வில்லனாக ஆண்டனி வர்கீஸ் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கிறார்கள். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதை இயக்க உள்ளார்.

கனவுகள் நிஜமாகும்

கனவுகள் நிஜமாகும்

இந்த நிலையில் தற்போது நடிகர் சாந்தனு இந்த வாய்ப்பு குறித்து டிவிட் செய்துள்ளார். அதில், கனவுகள் நிஜமாகும், என்னுடைய விருப்பமான நடிகர் விஜய் உடன் சேர்த்து நடிப்பதில் மிகுந்து மகிழ்ச்சி அடைகிறேன். தளபதி 64 படக்குழுவிற்கு மிக்க நன்றி, என்று சந்தோசமாக டிவிட் செய்துள்ளார்.

டிவிட்

எனக்கு வாய்ப்பு அளித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி. அதேபோல் பிரிட்டோ சார், படத்தின் இணை தயாரிப்பளார் லலித், ஜெகதீஷ் ஆகியோருக்கும் நன்றி. அன்பான ரசிகர்கள், நீங்கள் எப்போதும் எனக்கு நல்லதை மட்டுமே நினைத்துள்ளீர்கள், என்று சந்தோஷமாக குறிப்பிட்டுள்ளார்.

யார்

யார்

நடிகர் சாந்தனு தனது சின்ன வயதில் இருந்தே விஜய்யின் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. பல பேட்டிகளில் இதை வெளிப்படையாக சாந்தனு குறிப்பிட்டுள்ளார். அதேபோல் விஜயும் சாந்தனுவை பலமுறை பாராட்டி உள்ளார்.

அட

அட

சாந்தனு நடனத்திற்காக பலமுறை அவரை விஜய் பாராட்டி உள்ளார். அதேபோல், சர்க்கார் படத்தின் பிரச்சனையின் போது கூட சாந்தனு விஜய் பக்கம் நின்றார். அப்போது பாக்யராஜ் சர்க்கார் படத்திற்கு எதிராக செயல்பட்டார். ஆனாலும் சாந்தனு விஜய் பக்கம் நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X