யாஷிகாவோட எக்ஸ் பாய் ஃபிரண்ட் நான்.. அவளால தான் இந்த நிலைமைக்கு ஆளானேன்.. நிரூப் ஓப்பன் டாக்!

சென்னை: யாஷிகா ஆனந்தின் எக்ஸ் பாய் ஃபிரண்ட் நான் என நிரூப் தனது கதை சொல்லும் டாஸ்க்கை ஆரம்பித்த இடத்திலேயே அத்தனை போட்டியாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை யாஷிகா ஆனந்தின் முன்னாள் காதலர் தான் இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட நிரூப் என்பது குறிப்பிடத்தக்கது.

யாஷிகா ஆனந்தால் தான் தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளதாக நிரூப் சொல்லும் முதல் புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

பீம் பாய் நிரூப்

பீம் பாய் நிரூப்

ஹைட்டு சார்.. வெயிட்டு சார்னு சொல்ற அளவுக்கு பீம் பாய் போல ஆஜானுபாகுவாக கம்பீரமாக இருக்கும் நிரூப்பின் மனதுக்குள் என்ன என்ன சோக கதைகள் ஒளிந்திருக்கிறதோ என்பதை அறிந்து கொள்ள ஆவலுடன் இருக்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் இன்றைய எபிசோடு கண்டிப்பாக பிடிக்கும் என்றே தெரிகிறது.

வெளியானது முதல் புரமோ

வெளியானது முதல் புரமோ

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பில்ட் அப் கொடுக்கும் புரமோக்கள் தான் அதன் பக்க பலமாகவே உள்ளன. கடந்த இரு வாரங்களாக பிக் பாஸ் தொடங்கியதில் இருந்தே கதை சொல்லட்டுமா டாஸ்க் நடைபெற்று வருகிறது. இன்றைய முதல் புரமோவில் நிரூப் தனது சோக கதையை சொல்ல ஆரம்பித்துள்ள காட்சிகள் இடம்பெற்று ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளன.

எக்ஸ் பாய் ஃபிரண்ட்

எக்ஸ் பாய் ஃபிரண்ட்

கவர்ச்சி நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான யாஷிகா ஆனந்தின் எக்ஸ் பாய் ஃபிரண்ட் தான் நான் என தனது அறிமுகத்தை நிரூப் ஆரம்பிக்கும் போதே ஒட்டுமொத்த போட்டியாளர்களின் கவனத்தையும் ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி விட்டார் நிரூப்.

Recommended Video

Akshara Reddy ஒரு குழந்தை | Akshara அம்மா & அண்ணன் Shravan
யாஷிகாவால் தான்

யாஷிகாவால் தான்

தான் இந்த இடத்திற்கு வர காரணமே யாஷிகா ஆனந்த் தான் என்றும் மீடியாவில் தனக்கு யாரையும் தெரியாது என்றும் இந்த நிலைமைக்கு என்னை கொண்டு வந்து நிறுத்தியது அவள் தான் என்றும் யாஷிகா பற்றி மிகவும் உருக்கமாக பேசியுள்ளார் பிக் பாஸ் போட்டியாளர் நிரூப்.

பொண்ணால பையன் வளரக்கூடாதா

பொண்ணால பையன் வளரக்கூடாதா

எனக்கான வாழ்க்கையை அமைச்சிக் கொடுத்ததே யாஷிகா தான் என்றும் அவளால் தான் என் பாதை மாறியது என்றும் கூறியுள்ளார். மேலும், பசங்களால எவ்ளோ பொண்ணுங்க வளர்ந்திருக்காங்க, ஒரு பொண்ணால பையன் வளரக் கூடாதா? என ஹைபிட்ச்சில் நிரூப் பேசி அத்தனை பேரின் கைதட்டல்களையும் அள்ளி உள்ளார்.

எப்படி பிரிந்தோம்

எப்படி பிரிந்தோம்

மேலும், இன்றைய எபிசோடில் நிச்சயம் நிரூப் மற்றும் யாஷிகா ஆனந்த் எப்படி பிரிந்தார்கள் என்பது குறித்த விளக்கத்தையும் நிரூப் கொடுப்பார் என்றும், யாஷிகா ஆனந்துக்கு நேர்ந்த விபத்து குறித்தும் அப்போது அவருக்கு ஏற்பட்ட மன வேதனை குறித்தும் பேசுவாரா? என்பதை காண ரசிகர்கள் இன்றைய எபிசோடை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

டஃப் போட்டியாளர்

டஃப் போட்டியாளர்

பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் நிரூப் நிச்சயம் டஃப் ஆன போட்டியாளராகவும் கடைசி வரை பிக் பாஸ் வீட்டில் இருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை பாலாஜி முருகதாஸ் ரன்னர் அப் ஆனது போல ரன்னர் அப் ஆவதற்கும் நிரூப்பிற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X