twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களை திறக்க ஆலோசனை.. ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை ஏற்குமா நிர்வாகம்?

    |

    டெல்லி: நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் மாதத்தில் தியேட்டர்களை திறக்க தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது.

    இந்த பேச்சுவார்த்தையில், தியேட்டர் ஓனர்கள், தயாரிப்பாளர்கள், அமேசான் பிரைம் உள்ளிட்ட OTT தள நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    I&B Ministry Recommends Reopening of Cinemas in August

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தியேட்டர்கள் மூன்று மாத காலத்துக்கும் மேலாக மூடப்பட்டு கிடக்கும் நிலையில், வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை நாடு முழுவதும் தியேட்டர்களை திறப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

    அதில், உரிய பாதுகாப்பு அம்சங்களுடன், ஒரு சீட் இடைவெளி விடுதல், மற்றும் ஒரு ஆல்டர்னெட் வரிசையை காலியாக விடுதல், ஏசியை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் போன்ற பல கட்டுப்பாடுகளை அமைச்சகம் விதித்துள்ளது.

    சுஷாந்துக்கு அஞ்சலி.. தில் பெச்சாரா படத்திற்கு ரேட்டிங் 9.9 கொடுத்த ஐடிஎம்பி.. கொண்டாடும் ஃபேன்ஸ்!சுஷாந்துக்கு அஞ்சலி.. தில் பெச்சாரா படத்திற்கு ரேட்டிங் 9.9 கொடுத்த ஐடிஎம்பி.. கொண்டாடும் ஃபேன்ஸ்!

    இந்த தீவிர கட்டுப்பாடுகளுடன் தியேட்டரை திறந்தால், வெறும் 25 சதவீதம் பேர் தான் தியேட்டருக்கு வருவார்கள் என்றும், அதனால், தியேட்டர் தொழில் பெரிதும் பாதிக்கப்படும் என்றும், மாற்று வழிகளை அரசு செய்து தர வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

    விரைவில் தியேட்டர்களை திறக்க என்னவெல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் அந்த மீட்டிங்கில் ஆலோசிக்கப்பட்டுள்ளன.

    English summary
    The Information and Broadcasting Ministry has recommended to the Union Home Ministry that cinema halls all over the country be allowed to reopen in August.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X