ஏர்போர்ட்டில் சான்ஸ் கேட்டு ராஜமவுலியிடம் கெஞ்சிய வாரிசு நடிகை

By Siva

Recommended Video

Alia Bhatt: ஏர்போர்ட்டில் சான்ஸ் கேட்டு கெஞ்சிய வாரிசு நடிகை- வீடியோ

மும்பை: இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலியை விமான நிலையத்தில் பார்த்து பட வாய்ப்பு கேட்டு கெஞ்சியுள்ளார் பாலிவுட் நடிகை ஆலியா பட்.

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார் ஆலியா பட். பாகுபலி 2 படத்தை அடுத்து ராஜமவுலி இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர். படத்தில் ராம் சரண் தேஜா ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் ஆலியா.

இந்நிலையில் இந்த பட வாய்ப்பு தனக்கு எப்படி கிடைத்தது என்பதை அவர் தெரிவித்துள்ளார்.

ராஜமவுலி

ராஜமவுலி

நான் ராஜமவுலி சாரை விமான நிலையத்தில் பார்த்தேன். உடனே அவரிடம் ஆர்.ஆர்.ஆர். படத்தில் நடிக்க வாய்ப்பு அளிக்குமாறு கெஞ்சினேன். நான் கெஞ்சிக் கேட்டுக் கொண்டபோது அவர் ஹீரோயினை தேர்வு செய்யவில்லை என்கிறார் ஆலியா.

ஆலியா

ஆலியா

உங்கள் படத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன் என்றேன். அவர் என் டைம்லைன்கள் பற்றி பேசினார். எந்த டைம்லைனாக இருந்தாலும் நான் நடிக்கிறேன் என்றேன். அதன் பிறகு அவர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்று ஆலியா பட் தெரிவித்துள்ளார்.

நடிப்பு

நடிப்பு

சம்பள விஷயம் தொடர்பாக ஆலியா ஆர்.ஆர்.ஆர். படத்தில் நடிக்க மறுத்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் ராஜமவுலியிடம் கெஞ்சிக் கூத்தாடி பட வாய்ப்பை வாங்கியதாக அவரே தெரிவித்துள்ளார். இந்த படத்திற்காக ஆலியா தெலுங்கு கற்று வருகிறார்.

ரிலீஸ்

ரிலீஸ்

ஆர்.ஆர். ஆர். படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜூனியர் என்.டி.ஆருக்கு யார் ஜோடி என்பது தான் இதுவரை தெரியவில்லை. ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்க தேர்வு செய்யப்பட்ட இங்கிலாந்து நடிகை டெய்சி படத்தில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X