நடுவுல வந்தேன்.. நடுவுலேயே போய்டுறேன்.. பீட்டரை நீங்களே வச்சுக்கோங்க ஹெலன்.. எஸ்கேப்பாகும் வனிதா!

சென்னை: மூன்றாவது கணவரான பீட்டர் பாலுடன் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் எலிசபெத் ஹெலனே அவருடன் வாழட்டும் என கூறியுள்ளார்.

Recommended Video

தற்போது உண்மையை சொன்ன Vanitha | Filmibeat Tamil

நடிகை வனிதா விஜயக்குமார் தனது மூன்றாவது கணவரான பீட்டர் பாலை பிரிந்துள்ளார். இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமான வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், பீட்டர் பால் மீண்டும் மதுவுக்கு அடிமையாகிவிட்டார். என்னை விடவும் அவருக்கு குடியும் சிகரெட்டும் தான் முக்கியமாகிவிட்டதாக கூறியுள்ளார் வனிதா.

எலிசபெத்துக்கு கோரிக்கை

எலிசபெத்துக்கு கோரிக்கை

மேலும் பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலனுக்கும் தனது வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். ஏதோ ஒரு இடத்தில் தடுமாறிவிட்டேன். அவரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றதான் அவர் வாழ்க்கையில் வந்திருக்கிறேன்.

ஓரளவுக்கு புரிகிறது

ஓரளவுக்கு புரிகிறது

எலிசபெத் ஹெலன், அவரால் நீங்கள் என்ன அனுபவித்தீர்கள் என்று எனக்கு சத்தியமாக தெரியாது. ஆனால் என்ன வலி அனுபவித்திருப்பீர்கள் என்று எனக்கு ஓரளவுக்கு புரிகிறது. ஆனால் 10 சதவீதம் என்ன நடந்திருக்கும் இவர் விஷயத்தில் என்று புரிகிறது.

வாழ்க்கையில குறுக்க வரல

வாழ்க்கையில குறுக்க வரல

நீங்க என்னை ஒரு வில்லியாக்கியதுதான் உங்க மேல எனக்கு கோவமே தவிர நான் உங்க வாழ்க்கையில குறுக்க வரல. உங்க புருஷன நான் பிடுங்கிகிட்டு வரல. இது உங்க மனசாட்சிக்கு தெரியும். அவரை நான் தடுத்து பிடித்து வைத்துக் கொள்ளவில்லை.

ரெஸ்பான்ஸ் பண்ணவில்லை

ரெஸ்பான்ஸ் பண்ணவில்லை

அவர் மருத்துவமனையில் இருந்தபோது கூட, உங்களுக்கு பலமுறை போன் பண்ணினேன். உங்க மகனுக்கு மெஸேஜ் பண்ணினேன். ஆனால் நீங்கள் எதையும் ரெஸ்பான்ஸ் பண்ணவில்லை. நீங்கள் மீடியாவில் பேட்டிக் கொடுத்ததைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. என்னை அட்டாக் செய்ததை மட்டும்தாம் செய்தீர்கள்.

எதையும் திருடவில்லை

எதையும் திருடவில்லை

எனக்கும் உங்களுக்கும் எந்த பகையும் கிடையாது. உங்க மேல எனக்கு எந்த கோவமும் கிடையாது. என் மேல எந்த தவறும் இல்லை. உங்கக்கிட்டேயிருந்து நான் எதையும் திருடவில்லை. அவர் உங்களுக்கு வேண்டும் என நினைத்திருந்தால் நிறைய விஷயங்கள் செய்திருக்கலாம்.

நோ அப்ஜெக்ஷன் கடிதம்

நோ அப்ஜெக்ஷன் கடிதம்

இந்த 6 மாதங்களில் என்னை தொடர்பு கொண்டிருக்கலாம். பேசியிருக்கலாம், மருத்துவமனைக்கு வந்திருக்கலாம். சட்டப்படி மனைவியாக என்னால் கையெழுத்து போட முடியாது என்று போலீஸ் மூலம் உங்களிடம் நோ அப்ஜெக்ஷன் கடிதம் கேட்டேன்.

 ஆயிரம் கோபம் இருக்கலாம்

ஆயிரம் கோபம் இருக்கலாம்

உங்களை பணம் கட்ட சொல்லவில்லை. ஒரு லெட்டர் கூட நீங்கள் கொடுக்கவில்லை. நான் அவருக்கு நின்ற அளவுக்கு கூட நீங்கள் நிற்கவில்லை. உங்களுக்கு ஆயிரம் கோபம் அவர் மீது இருக்கலாம். ஆனால் நீங்கள் அவருக்காக எதுவும் செய்யவில்லை.

ஓடிப்போனால் ஓடிப் போகனும்

ஓடிப்போனால் ஓடிப் போகனும்

திரும்பவும் மீடியாவில் போய் நான் அப்பவே சொன்னேன்லாம் சொல்லாதீங்க. விட்டுட்டு ஓடிப்போனால் ஓடிப் போகனும்.. டைவர்ஸ் பண்ணணும்.. ஆனால் அவரையும் வாழ விடாமல் என்னையும் வில்லியாக்கிவிட்டீர்கள் .. இந்த 6 மாதத்தில் மீடியாவில் அவரைப் பத்தி பேசி மீண்டும் அவரை குடிக்க வைத்து விட்டீர்கள்.

தாரளமாக வாழுங்க

தாரளமாக வாழுங்க

இல்லாவிட்டால் அவருக்கு இவ்ளோ சீக்கிரம் ஹார்ட் அட்டாக் வந்திருக்காது. உங்களாலும் நான் காயமடைந்துள்ளேன். உங்களுக்கு உங்க புருஷன் வேணும்னா தாரளமா அவருக்கு கூட போய் வாழுங்க.. எந்த விதத்திலேயும் உங்களை தடுக்க மாட்டேன்.

நடுவுலேயே போய்டுறேன்

நடுவுலேயே போய்டுறேன்

ஏன்னா நான் நடுவுல வந்தேன், நடுவுலேயே போய்டுறேன். ஒரு காரணத்திற்காக வந்திருக்கிறேன். என்ன காரணம் என்று தெரியவில்லை. நிச்சயமாக நல்ல காரணமாகதான் இருக்கும். அவரை காப்பாற்றுவதற்காக வந்துள்ளேன். உங்களால முடியாத ஒரு விஷயத்தை பண்ணியிருக்கேன்.

விலகி போயிடுறேன்

விலகி போயிடுறேன்

நடுவுல வந்தேன் நடுவுலேயே விலகி போய்டுறேன். எவ்ளோ பார்த்துட்டேன். மீண்டு வந்துட்டேன். என் குழந்தைகளின் நலனுக்காக இதிலிருந்து நான் வெளியே வந்து விடுவேன் என நம்புகிறேன் நன்றி என கூறியுள்ளார் வனிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X