twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பணம் சம்பாதிக்கத்தான் சினிமாவுக்கு வந்தேன்.. கேஜிஎஃப் இயக்குநர் என்ன இப்படி சொல்லிட்டாரு!

    |

    சென்னை : ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்து இப்போது வசூல் வேட்டை நடத்தி வரும் திரைப்படம் கே ஜி எஃப் 2

    2018ஆம் ஆண்டு கேஜிஎஃப் பாகம்-1 வெளியானதை தொடர்ந்து இப்போது அதன் இரண்டாவது பாகம் வெளியாகி 1000 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்து வருகிறது

    இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் பணம் சம்பாதிக்கத்தான் சினிமாவுக்கு வந்தேன் என பேசியுள்ளதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்

    அரபிக்குத்து சர்ச்சை… இருந்தாலும் சிவகார்த்திகேயன் இப்படி பண்ணியிருக்க கூடாது ?அரபிக்குத்து சர்ச்சை… இருந்தாலும் சிவகார்த்திகேயன் இப்படி பண்ணியிருக்க கூடாது ?

    இந்திய சினிமாவே திரும்பிப் பார்க்க

    இந்திய சினிமாவே திரும்பிப் பார்க்க

    மற்ற மொழிகளில் வெளியாகும் திரைப்படங்கள் தான் கன்னட மொழியில் ரீமேக் செய்து வெற்றி கொடுத்த காலம் போய் இப்பொழுது கன்னட சினிமாவை ஒட்டுமொத்த இந்திய சினிமாவே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது கே ஜி எஃப். நடிகர் யஷ் நடிப்பில் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படம் இப்போது இந்திய அளவில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு கேஜிஎஃப் படத்தின் முதல் பாகம் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்தப் படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

    இரண்டாவது பாகம்

    இரண்டாவது பாகம்

    யஷின் மிரட்டலான நடிப்பு பிரம்மாண்ட உருவாக்கம் இதுவரை கன்னட சினிமாவே கண்டிராத அளவிற்கு அட்டகாசமான திரைக்களம் காட்சிக்கு காட்சி கூஸ்பம்ப்ஸ் ஆகக்கூடிய வசனங்கள் எனஇயக்குநர் பிரசாந்த் நீல் படம் முழுக்க மிரட்டியுள்ளார் . கே ஜி எஃப் முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதன் இரண்டாவது பாகம் மேலும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வந்தது.

    வசூல் சாதனை

    வசூல் சாதனை

    இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியான கே ஜி எஃப் இந்திய சினிமாவையே ஆட்டிப்படைத்து வருகிறது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் பல மாஸான காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. யஷின் அபாரமான நடிப்புக்கு இணையாக இரண்டாவது பாகத்தில் இந்தி நடிகர் சஞ்சய் தத் ஆதிரா என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக மிரட்டியுள்ளார்.

    பணம் சம்பாதிக்கத்தான் வந்தேன்

    பணம் சம்பாதிக்கத்தான் வந்தேன்

    கேஜிஎஃப் இரண்டாவது பாகம் வெளியாகி அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த படம் இந்திய அளவில் சுமார் 1000 கோடியை தாண்டி வசூல் செய்து வருவதாகவும் கூறப்படும் நிலையில் இப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் நில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் சினிமாவிற்கு பணம் சம்பாதிக்க தான் வந்தேன். பணம் தான் எனக்கு முன்னுரிமை அதற்குப் பிறகுதான் கலை என மிக ஓப்பனாக பேசியுள்ளார். இதற்கு முன்பு இயக்குநர் நெல்சன் சினிமாவுக்கு பணம் சம்பாதிக்கத்தான் வந்தேன் என கூறியது சர்ச்சைக்குள்ளானதைத் தொடர்ந்து இப்பொழுது கேஜிஎஃப் இயக்குநரும் அதேபோல கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    English summary
    I came to Cinema for earning moeny says KGF Director Prashanth Neel
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X