twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பணம் சம்பாதிக்க தான் சினிமாவுக்கு வந்தேன்... இயக்குனர் நெல்சன் பேச்சு!

    |

    சென்னை: கோலமாவு கோகிலா என்ற பிளாக்பஸ்டர் வெற்றி படத்தை கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார்

    சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை தொடர்ந்து இப்பொழுது விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கியுள்ளார்

    பீஸ்ட் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் சினிமாவிற்கு பணம் சம்பாதிக்க தான் வந்தேன் என நெல்சன் வெளிப்படையாக பேசியுள்ளார்.

    தமிழில் அடுத்து ரிலீசாக போகும் படங்கள் இவைகள் தான்...ரசிகர்ளே ரெடியா? தமிழில் அடுத்து ரிலீசாக போகும் படங்கள் இவைகள் தான்...ரசிகர்ளே ரெடியா?

    போதை பொருள் கடத்தும் பெண்ணாக

    போதை பொருள் கடத்தும் பெண்ணாக

    தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாராவின் திரை வாழ்க்கையில் மிக வித்தியாசமான கதைக்களத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் கோலமாவு கோகிலா 2018ஆம் ஆண்டு வெளியான கோலமாவு கோகிலா படத்தில் ஹீரோவாக யோகி பாபு நடித்திருப்பார். நடிகை நயன்தாரா முதல் முறையாக போதை பொருள் கடத்தும் பெண்ணாக இந்த படத்தில் நடித்திருப்பார் மேலும் யோகி பாபு காமெடி இந்த படத்தில் பட்டையை கிளப்பியது அதுமட்டுமல்லாமல் அனிருத்தின் இசையில் பாடல்களும் மிகப் பெரிய பக்கபலமாக அமைந்தது. கோலமாவு கோகிலா படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய பாடலும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது

    மாபெரும் வசூலை அள்ளியது

    மாபெரும் வசூலை அள்ளியது

    முதல் படமே வெற்றிப்படமாக அமைந்த நிலையில் நெல்சன் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் படத்தை இயக்கினார். இந்த முறையும் வித்தியாசமான கடத்தலின் பின்னணி கதை களத்தில் நெல்சன் இயக்கி இருக்க டாக்டர் படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. சிவகார்த்திகேயன் இதுவரை நடித்த படங்களிலேயே மிக வித்தியாசமான கதாபாத்திரத்தில் டாக்டர் படத்தில் நடித்திருப்பார் மேலும் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி என பலர் இந்த படத்தில் பட்டையை கிளப்பி இருந்தார்கள். டாக்டர் படம் சக்கை போடு போட்டு மாபெரும் வசூலை அள்ளியது

    பீஸ்ட்

    பீஸ்ட்

    இந்த நிலையில் விஜய்யுடன் கூட்டணி அமைத்தது நெல்சன் பீஸ்ட் படத்தை இயக்கினார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் அனிருத்தின் இசையில் பெரும் எதிர்பார்ப்போடு தமிழ்,தெலுங்கு, மலையாளம்,கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியான பீஸ்ட் படத்திற்கு எதிர்பார்த்ததை விடவும் எதிர்மறையான கருத்துக்கள் மிக அதிகமாக வந்து கொண்டுள்ளது.

    பணம் சம்பாதிக்கத்தான் வந்தேன்

    பணம் சம்பாதிக்கத்தான் வந்தேன்

    என்னதான் எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் முதல் இடத்தில் பீஸ்ட் உள்ள நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய நெல்சன் சினிமாவிற்கு பணம் சம்பாதிக்கத்தான் வந்தேன். இங்கு நல்ல படம் எடுத்தா லைஃப் டைம் இருக்காது என வெளிப்படையாக பேசியுள்ளார்.

    English summary
    I came to cinema industry only to earn more money says nelson dilipkumar
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X