வீட்டுக்குள் அம்மாவின் வாசனையை இப்போதும் உணர்கிறேன்...பிரபல நடிகை ஶ்ரீதேவி மகள் உருக்கமான போஸ்ட்!

By

மும்பை: தனது வீட்டுக்குள் அம்மாவின் வாசனையை இப்போதும் உணர்வதாக, நடிகை ஶ்ரீதேவியின் மகள் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Jhanvi Kapoor Birthday Celebration | Sri devi Daughter | Boney Kapoor

நடிகை ஸ்ரீதேவி கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி துபாயில் உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது மாரடைப்பால் மரணமடைந்தார்.

மறைந்த ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான தடக் படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார்.

உருக்கமானப் பதிவு

உருக்கமானப் பதிவு

இப்போது, இன்னும் சில படங்களில் நடித்துவரும் இவர், தற்போது கொரோனாவால் மற்றவர்களைப் போல வீட்டுக்குள் இருக்கிறார். இவர், கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டதால், சில விஷயங்களை கற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி உருக்கமானப் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கவலைக் கொள்கிறேன்

கவலைக் கொள்கிறேன்

நான் உண்ணும் உணவின் மதிப்பை இப்போது புரிந்துகொண்டேன். எங்கள் வீட்டில் இருக்கும் அரிசி உள்ளிட்டவைகள், ஊரடங்கு உத்தரவு முடியும் வரை போதுமா? என்று தெரியவில்லை. வீட்டு மளிகை பொருட்களுக்காக, அவர் உயிரை பணயம் வைத்து வெளியில் செல்வதை அறிந்து கவலைக் கொள்வதை, இதற்கு முன் நான் யோசித்து கூட பார்த்ததில்லை.

அப்பா சிரிக்கிறார்

அப்பா சிரிக்கிறார்

இதுவரை சுயநலவாதியாகவும் பொறுப்பற்றும் இருந்ததை இப்போது தெரிந்துகொண்டேன். இதற்குமுன் நானும் என் தங்கை குஷியும் வெளியில் சென்று வீடு திரும்பும்போது, என் தந்தை எங்களுக்காகக் காத்திருப்பதை ஒருபோதும் பார்க்க மாட்டேன். இப்போது நாள் முழுவதும் அவருடன் இருப்பதால் சோபாவில் அமர்ந்து சிரிக்கிறார். இதற்கு முன் அதே இடத்தில தனியாக அவர் எங்களுக்காகக் காத்திருந்த தருணங்களை யோசித்து பார்க்கிறேன்.

ஆடம்பரம்

ஆடம்பரம்

மேலும் நான் காரில் செல்வது, விமானத்தில் பறப்பது எல்லாம் ஆடம்பரமானவை என்பதை புரிந்துகொண்டேன். என் வீட்டில் உள்ள அனைவரையும் கவனிக்க வேண்டும், அவர்களின் உடல்நிலை எனது ஆரோக்கியத்தை பாதிக்கிறது, எனது தந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. நான் அவர்களை நேசிப்பதால் அவர்களைக் கவனிக்க விரும்புகிறேன். அவர்கள் ஒவ்வொரு நாளும் என்னைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டேன்.

அம்மாவின் வாசனை

அம்மாவின் வாசனை

என் அம்மாவின் டிரெஸ்சிங் ரூமில் அவர் வாசனை இப்போதும் இருப்பதை புரிந்துகொண்டேன். குஷி எனது சிறந்த சகோதரி என அறிந்தேன். நீங்கள் எதையும் பெறுவதற்கு இசை உதவும் என அறிந்தேன்' என்று நீண்ட அறிக்கையை பதிவிட்டுள்ளார். இதை, பிரபல நடிகை ஷோபிதா துலிபாலா, ஜான்வியின் குடும்ப உறுப்பினர்கள் அர்ஜுன் கபூர், சோனம் கபூர், மஹ்தீப் கபூர் உட்பட பலர் வரவேற்றுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X