அந்த ஒரு விஷயத்தில் சிம்பு போல என்னால் முடியாது... தனுஷ் எதைப் பற்றி சொல்கிறார் தெரியுமா?

சென்னை: எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அதில் இரு துருவங்கள் இருக்கும். அப்படி இல்லையென்றால் சுவாரஸ்யம் இருக்காது.

அதில் முதன்மையாகக் கருதப்படுவது சினிமா துறை. தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், அஜித் - விஜய் என்ற பட்டியல் பிரபலம்.

நடிகர்கள் சிம்பு மற்றும் தனுஷ் நடிக்க வந்த புதிதில் அவர்கள் அடுத்த துருவங்கள் என்று பேசப்பட்டனர். அவ்வாறு இருக்க, சிம்பு பற்றி தனுஷ் கூறிய ஒரு விஷயம் இப்போது வைரலாக பார்க்கப்படுகிறது.

இருவரிடையே போட்டி

இருவரிடையே போட்டி

அஜித்-விஜய் போட்டி மக்கள் மத்தியில் மட்டுமின்றி, மீடியாவாலும் இன்று வரை பேசப்படுகிறது. ஒரு வேளை இந்த யுக்தியை பின்பற்றினால் தாங்களும் பேசப்படுவோம் என்று நினைத்தார்களோ என்னவோ, ஆரம்பத்தில் இருவரும் போட்டி போட்டிக் கொண்டு பேட்டிகள் கொடுத்தனர். இருவருமே வாரிசு நடிகர்கள் என்றாலும், சிம்புவை பொருத்த வரை சிறு வயதிலிருந்தே பிரபலம். ஆனால் கதாநாயகனாக முதல் சில படங்களில் ஜொலிக்கவில்லை. ஆனால் அதற்கு நேர்மாறாக தனுஷ் சிறு வயதில் நடிக்கவில்லை என்றாலும், அறிமுகப் படத்திலிருந்தே தொடர் வெற்றிகளை கொடுத்து வந்தார்.

நட்பும் பிரிவும்

நட்பும் பிரிவும்

அவ்வாறு போட்டியாளர்களாக இருந்தவர்கள், திடீரென நட்பு பாராட்ட துவங்கினர். இருவரும் ஒன்றாக சேர்ந்து வீடியோ கேம்ஸ் விளையாடுவது, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வது என நெருங்கிய நண்பர்கள் போல் தோற்றமளித்தார்கள். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை மீண்டும் எதிரெதிர் துருவங்களாக மாறினர். தனுஷிடமிருந்து விலகிச் சென்ற பல சினிமா பிரபலங்கள் சிம்புவிடம் நெருக்கமாக இருப்பதை காண முடியும்.

தனுஷ் புகழாரம்

தனுஷ் புகழாரம்

இந்நிலையில் தனுஷ் முன்னதாகக் கலந்து கொண்ட சிம்பு பட விழாவில் பேசியது இப்போது வைரலாகியுள்ளது. அதில், தான் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்துக் கொன்டிருந்த போது அதற்கு நடன இயக்குநராக வந்த அஷோக் மாஸ்டர் சிம்பு ஆடியதைப் பற்றி பெருமையாக பேசியதாகவும், அதே போல தன்னையும் ஆடச் சொன்னதாகவும், பின்னர் அந்தப் பாடலை பார்த்த பின்பு என்னால் எப்படி அப்படியெல்லாம் ஆட முடியும்? என்று கூறினாராம். அவர் பிறந்த உடனேயே சினிமாவிற்கு வந்தவர். நான் பிழைப்பிற்கா சினிமாவிற்கு வந்தவன். அப்போது மட்டுமல்ல, இப்போதும் என்னால் அவ்ரைப் போல் ஆட முடியாது என தனுஷ் கூறியுள்ளார்.

இருவரின் வளர்ச்சி

இருவரின் வளர்ச்சி

என்னதான் போட்டி நடிகர்கள் நிறைய பேர் வந்தாலும், இன்னும் அவர்கள் இருவருக்கும் உள்ள ரசிகர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். ஒரு பக்கம் தனுஷ் ஹாலிவுட் படம் வரை உயர்ந்துள்ளார் என்றால், இன்னொரு பக்கம் "இனிமேல் சிம்புவால் பழைய மாதிரி நடிக்கவோ நடனமாடவோ முடியாது. அவரது கேரியர் முடிந்துவிட்டது" என்ற விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மாநாடு படம் மூலம் சிம்பு ரீ என்ட்ரி கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X