எங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்

By Siva

Recommended Video

எங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்- வீடியோ

மும்பை: தன் அம்மா பயந்தது தற்போது தான் தனக்கு புரிவதாக ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்ரீதேவி தனது மூத்த மகள் ஜான்வி டாக்டராக வேண்டும் என்று விரும்பினார். ஆனால் ஜான்விக்கோ தாய் வழியில் நடிகையாக வேண்டும் என்று ஆசை.

ஜான்வி நடித்துள்ள முதல் படமான தடக் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் படம், அம்மா பற்றி ஜான்வி கூறியதாவது,

கவலை

கவலை

நீ நடிக்க வந்தால் உன்னை என்னுடன் ஒப்பிடுவார்களே என்று கூறி அம்மா கவலைப்பட்டார். நீ கடினமாக உழைக்கிறாய் அது புரியாமல் உன்னை எதற்கெடுத்தாலும் என்னுடன் ஒப்பிடுவார்கள் என்று அம்மா அடிக்கடி கூறினார்.

400வது படம்

400வது படம்

உன் முதல் படத்தை என்னுடைய 400வது படத்துடன் ஒப்பிடுவார்கள் என்று அம்மா கூறினார். அவரின் கவலை தற்போது தான் எனக்கு புரிகிறது. என்னை அம்மாவுடன் ஒப்பிடுகிறார்கள்.

அய்யோ

அய்யோ

நான் நடிகையாக விரும்புகிறேன் என்று வீட்டில் கூறியபோது அம்மா அய்யோ, அய்யோ, அய்யோ என்று கூறி பயந்தார். ஆனால் அப்பா கூலாக எடுத்துக் கொண்டு என்னை உற்சாகப்படுத்தினார். பின்னர் என் விருப்பப்படியே விட்டுவிட்டார் அம்மா.

லக்கி

லக்கி

நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. தடக் பட வாய்ப்பு கிடைக்க நான் என்ன நல்லது செய்தேன் என்று தெரியவில்லை. நான் கடினமாக உழைக்க விரும்புகிறேன். நான் எனக்கென ஒரு இடத்தை பிடிக்க விரும்புகிறேன்.

ரிலீஸ்

ரிலீஸ்

என் முதல் படத்தை பார்க்க அம்மா இல்லை. அவர் இல்லாததால் ஏற்பட்ட வெற்றிடம் அப்படியே தான் இருக்கும். சிறப்பாக நடித்து அம்மாவை பெருமை அடைய செய்வேன் என்கிறார் ஜான்வி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X