பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேறியதற்கு இதுதான் காரணமா? அவரே சொன்ன விளக்கம்
சென்னை : பிக் பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் 25 நாட்களை கடந்து நடந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பரபரப்பை கிளப்பி வந்த நடிகை வனிதா, இரு தினங்களுக்கு முன்பு வெளியேறியுள்ளார்.
அவர் வெளியேற பல்வேறு காரணங்களை காரணம் காட்டி தகவல்கள் வெளியாகி வருகிறது. இதுகுறித்து அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை வனிதா
நடிகை வனிதா விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானவர். இவரது அட்ராசிட்டிகள் அந்த நிகழ்ச்சியில் மிகவும் பிரபலம். இது மட்டுமின்றி குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்று பட்டையை கிளப்பினார். ஆனாலும் இவரது போல்டான செயல்பாடுகள் சக போட்டியாளர்களை எப்போதும் கோபத்திற்கு உள்ளாக்கி வருகின்றன.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி
பிக் பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சியில் பழைய போட்டியாளர்கள் சேர்க்கப்பட்ட போது, அதில் வனிதாவிற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி கடந்த 25 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று வருகிறது.

விறுவிறு போட்டியாளர்
போட்டியின் விறுவிறுப்பிற்கு வனிதாவின் செயல்பாடுகள் உறுதுணையாக இருந்தது. சக போட்டியாளர்களிடம் தொடர்ந்து வாக்குவாதங்கள், சண்டைகள் உள்ளிட்டவற்றை தொடர்ந்து செய்து வந்தார். டீத்தூளை ஒளித்து வைத்தது உள்ளிட்ட இவரது நடவடிக்கைகள் ரசிகர்களை முகம்சுளிக்க வைத்தாலும் நிகழ்ச்சியை தொடர்ந்து சுவாரஸ்யப்படுத்தியது.

நிகழ்ச்சியில் விலகிய வனிதா
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு போட்டியில் இருந்து விலகுவதாக வனிதா தொகுப்பாளர் கமலிடம் தெரிவித்திருந்தார். கண்ணீருடன் இவர் இதைக் கூறி தொடர்ந்து எந்த விளைவுகளையும் தான் சந்திக்க தயாராக உள்ளதாகவும் கூறினார். இதையடுத்து கமல் இவரை வெளியே அனுப்பி வைத்தார்.

வனிதா குறித்த வதந்திகள்
முன்னதாக நிகழ்ச்சிக்காக நேரம் ஒதுக்க முடியவில்லை என்று கூறி கமலும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில், ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று கூறப்பட்டது. இதையடுத்தே வனிதா வெளியேறும் முடிவை எடுத்ததாக கூறப்பட்டது. ஆயினும் தற்போது சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். இதுகுறித்த பிரமோவும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தைரியமான முடிவு
இதனிடையே நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ள வனிதா, தன்னுடைய வெளியேறும் முடிவை ரம்யா கிருஷ்ணனுடன் தொடர்பு படுத்தி வதந்தியை பரப்புபவர்களுக்கு பதிலளிக்கும் வகையில், தான் தனக்கு மதிப்பு கொடுத்து வெளியேறும் முடிவை எடுத்ததாகவும் தான் மனஉளைச்சலுக்கு ஆளானதால் தைரியமான முடிவை எடுக்க வேண்டியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

வேடிக்கையான விளையாட்டு
தன்னுடைய இந்த முடிவுக்கு ஒத்துழைப்பு அளித்த என்டெமால் மற்றும் டிஸ்னி குழுவிற்கு தான் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் மிகவும் வளர்ந்தவர்களுக்கு இதெல்லாம் வேடிக்கையான விளையாட்டு என்றும் குழந்தைகள் நாடகத்தை ரசிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











