ஜாலி பாட்டியாக மலையாளப் படத்தில் களமிறங்கிய நடிகை லட்சுமி
பழம்பெறும் நடிகை லட்சுமி நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார்.
மலையாளப் படம் ஒன்றில் பாட்டியாக நடித்து வருகிறார். 1960களிலேயே நடிக்க வந்தவர் நடிகை லட்சுமி. எம்.ஜி.ஆர், சிவாஜி படங்கள் தொடங்கி ரஜினி, கமல், பிரபு வரை ஹீரோயினாக நடித்தார்.
அம்மாவாகவும், ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யாவின் பாட்டியாகவும் நடித்த லட்சுமி, டிவி சேனல்களில் கதையல்ல நிஜம் தொடரை தொகுத்து வழங்கினார்.

400 படங்களில் நடித்த லட்சுமி
இந்திய மொழிகளில் 400 படங்களுக்கு மேல் நடித்த இவர், கடந்த சில வருடங்களாக சினிமாவில் அவர் நடிக்கவில்லை. சினிமாவை விட்டு விலகுவதாகவும் அறிவித்தார். ஆனால் அவர் இப்போது மீண்டும் நடிக்க வந்துவிட்டார்.

வினீத் படத்தில்
ஓர்ம உண்டோ இ முகம் என்ற மலையாளப்படத்தில் நடிக்கிறார். இதில் வினித் ஹீரோவாகவும் நமீதா ப்ரமோத் ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள்.

சினிமாவை கவனிக்கிறேன்
நான் சினிமாவைவிட்டு விலகி இருந்தாலும் சினிமாவில் நடப்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். குறிப்பாக மலையாள சினிமாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்னை ஆச்சர்யப்படுத்துகிறது.

மலையாள சினிமாவில்
புதியவர்களின் வருகை தொழில்நுட்பம், கதை களம், என மலையாள சினிமா பெரும் மாற்றத்தை கொண்டுள்ளது. இந்த மாற்றத்தில் என்னையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக மீண்டும் நடிக்கிறேன்.

ஜாலி பாட்டி
இதில் நான் ஓரு ஜாலியான பாட்டியாக நடிக்கிறேன். கேரக்டர் எனக்கு பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

சுகமான சிரமம்
சென்னையிலிருந்து அடிக்கடி விமானத்தில் பறந்து சென்று நடிப்பது சிரமமாக இருந்தாலும் சினிமா என்னை இழுத்து அந்த சிரமத்தை மறக்கடித்துவிடுகிறது. என்கிறார் லட்சுமி.


Click it and Unblock the Notifications











