படம் ஃபிளாப்.. மன அழுத்தத்தில் சிக்கிய பிரபல பாடகி சின்மயி ஹஸ்பண்ட்..அவருக்கு இப்படியொரு ஆசையாம்!

By

சென்னை: தான் இயக்கிய படம் தோல்வி அடைந்ததால், மன அழுத்தத்தில் இருந்து மீளமுடியாமல் இருந்ததாக பாடகி சின்மயின் கணவர் தெரிவித்துள்ளார்.

தமிழில், மாஸ்கோவின் காவிரி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ராகுல் ரவீந்திரன். ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இயக்கிய இந்தப் படத்தில் சமந்தா ஹீரோயினாக நடித்தார்.

இதையடுத்து விண்மீன்கள், சூரிய நகரம், வணக்கம் சென்னை படங்களில் நடித்த ராகுல் ரவீந்திரன் தெலுங்கு படங்களிலும் நடித்துவந்தார்.

இயக்குனர் ஆனார்

இயக்குனர் ஆனார்

அங்கு, அண்டாள ராக்சஷி, டைகர், ஶ்ரீமந்துடு, யு டர்ன் உட்பட சில படங்களில் நடித்த ராகுல் ரவீந்திரன், பிரபல பின்னணி பாடகி சின்மயியை திருமணம் செய்துகொண்டார். படங்களில் நடித்து வந்த ராகுல் ரவீந்திரன், சுஷாந்த், ருஹானி சர்மா நடித்த Chi La Sow என்ற தெலுங்கு படம் மூலம் இயக்குனர் ஆனார். இந்தப் படம் கவனிக்கப்பட்டது. சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்காக தேசிய விருதும் பெற்றது.

நாகார்ஜூனா

நாகார்ஜூனா

இதையடுத்து கடந்த ஆண்டு 'மன்மதுடு 2' படத்தை இயக்கினார். இதில் நாகார்ஜூனா ஹீரோவாக நடித்தார். ரகுல் பிரீத் சிங், வெண்ணிலா கிஷோர், ரோகினி, தேவதர்ஷினி உட்பட பலர் நடித்தனர். கீர்த்தி சுரேஷ், சமந்தா உட்பட சிலர் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தனர். மெகா பட்ஜெட் படமான இதற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் மன அழுத்தத்தில் இருந்து மீளாமல் இருந்தேன் என்று அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, அந்த படம் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அது தோல்வி அடைந்ததால் சில மாதங்களாக மன அழுத்தத்தில் விழுந்தேன். ஐந்து மாதங்களுக்குப் பிறகே அடுத்த கதையை எழுதினேன்.

பெரும்பான்மை

பெரும்பான்மை

அந்தப் படம் எதற்காக தோல்வி அடைந்தது என்பது பற்றி இப்போது விளக்கமாகச் சொல்ல விரும்பவில்லை. அந்தப் படத்தை பெரும்பான்மையான ரசிகர்கள் விரும்பவில்லை. அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்போது இரண்டு ஸ்க்ரிப்ட் ரெடி செய்திருக்கிறேன். தமிழில் பெரிய ஹீரோ ஒருவர் நடித்தால் நன்றாக இருக்கும். அதற்கான முயற்சியில் இருக்கிறேன்.

பவன் கல்யாண்

பவன் கல்யாண்

இதைத் தவிர இரண்டு படங்கள் இருக்கிறது. நடிப்பிலும் கவனம் செலுத்தினாலும் டைரக்‌ஷனுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறேன். பவன் கல்யாண், மகேஷ்பாபு ஆகியோரை இணைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இது அவ்வளவு எளிதான விஷயமில்லை என்றாலும் பண்ண வேண்டும் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X