Don't Miss!
- News
சேகர் ரெட்டிக்கு ரூ. 7 கோடி? ஐ.டி உத்தரவை ரத்து செய்யக் கோரிய அதிமுக ‘மாஜி’.. ’அதே’ நாளில் விசாரணை!
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அவரது மரணத்தால் 2 நாட்கள் தூங்காமல் தவித்தேன் புனித் ராஜ்குமார் புகழஞ்சலி கூட்டத்தில் கலங்கிய விஷால்
சென்னை: புனித் ராஜ்குமாரின் மரணத்தால் 2 நாட்கள் தூங்காமல் தவித்ததாக நடிகர் விஷால் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
Recommended Video
கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான புனித் ராஜ்குமார் கடந்த மாதம் 29 ஆம் தேதி கார்டியாக் அரெஸ்ட்டால் திடீரென மரணமடைந்தார்.
வீட்டில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த நடிகர் புனித் ராஜ்குமார் படிக்கட்டில் அமர்ந்திருந்த போது சரிந்து விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தன்னை
விட
5
வயது
சிறிய
நடிகரை
திருமணம்
செய்யும்
பிரபல
நடிகை...
கல்யாணம்
எங்கேன்னு
பாருங்க?

அரசு மரியாதையுடன் அடக்கம்
இதனை தொடர்ந்து புனித் ராஜ்குமாரின் உடல் கண்டீரவா ஸ்டுடியோவில் அவரது தந்தை ராஜ்குமார் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகிலேயே முழு அரசு மரியதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவிடத்தில் தமிழ் திரைத்துறை பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

என்னால் ஏற்க முடியவில்லை
இந்நிலையில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு புகழஞ்சலி கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் விஷால் கலந்து கொண்டார். அப்போது புனித் ராஜ்குமார் குறித்து உருக்கமாக பேசினார். அவர் பேசியதாவது, நடிகர் புனித் ராஜ்குமாரின் இறப்பு செய்தியை என்னால் ஏற்கவே முடியவில்லை. அவர் மிக திறமையான நடிகர்.

2 நாட்கள் தூங்கவில்லை
புனித் ராஜ்குமார் இறந்த பிறகு 2 நாட்கள் எனக்கு தூக்கம் வராமல் கஷ்டப்பட்டேன். எனக்கு சொந்த வீடு இல்லை. வீடு வாங்க வேண்டும் என்று சிறிது பணத்தை சேமித்து வைத்துள்ளேன். வீடு பின்பு கூட வாங்கிக்கொள்ள முடியும். புனித் ராஜ்குமார் நடத்திய சக்திதாமா அனாதை இல்ல குழந்தைகளின் கல்வி செலவை நான் ஏற்கிறேன்.

ஒரு வாய்ப்பு கொடுங்கள்
இதற்கு அவரது குடும்பத்தினர் அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்கிறேன். புனித் விட்டு சென்ற நல்ல பணிகளை நாம் தொடர வேண்டும். அதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். அனைவருக்கும் இதயம் உள்ளது. ஆனால் நல்ல பணிகளை ஆற்ற வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருப்பது இல்லை.

வெளியில் தெரியாமல் செய்துள்ளார்
அவர் சமூக சேவைகளை வெளியில் தெரியாமல் செய்துள்ளார். நான் விளம்பரத்திற்காக இந்த கல்வி செலவை ஏற்பதாக கூறவில்லை. உள்ளபடியே அவரது இந்த நல்ல சேவையை தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதை செய்கிறேன் என்றார். ஏற்கனவே புனித் ராஜ்குமாரின் உதவியால் படித்து வந்த 1800 மாணவர்களின் கல்வி செலவை ஏற்பதாக நடிகர் விஷால் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.