இந்த பூனம் பாண்டேவுக்கு விவஸ்தையே இல்லை: கிம்முடன் 'பேக்' போட்டி
மும்பை: அமெரிக்க டிவி ரியாலிட்டி ஷோ நடிகை கிம் கர்தாஷியனுக்கு முன்பு நான் தான் பின்னழகை போட்டோவுக்கு அந்த போஸில் காட்டினேன் என நடிகை பூனம் பாண்டே தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டிவி ரியாலிட்டி ஷோ நடிகையான கிம் கர்தாஷியனும் சரி, நடிகை பூனம் பாண்டேவும் சரி அரை நிர்வாண, முழு நிர்வாணமாக போட்டோவுக்கு போஸ் கொடுக்க சற்றும் தயங்காதவர்கள். இருவருமே மீடியாக்களின் கவனத்தை ஈர்க்கத் துடிப்பவர்கள்.

இந்நிலையில் கிம் கர்தாஷியன் பத்திரிக்கை ஒன்றுக்கு ஆடையை அவிழ்த்து பின்னழகை பளிச்சென்று காட்டி போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த பூனம் பாண்டேவுக்கு மூளையில் ஒரு பல்ப் எரிந்தது. உடனே ட்விட்டருக்கு சென்றார், இந்த ட்வீட்டை தட்டி விட்டார்.
கிம் கர்தாஷியன் இப்பொழுது தான் செய்துள்ளார் இதை நான் முன்பே செய்துள்ளேன் என்று பூனம் ட்வீட் செய்து தனது பின்னழகை காட்டிய போட்டோவையும் வெளியிட்டுள்ளார்.
நிர்வாணம், அரை நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு தான் பூனம் பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











